செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு அதிவேகமாக வளர்ச்சியடைந்து வரும் இக்காலத்தில் சிங்கப்பூர் மாணவர்கள் அடிப்படை கணினி நிரலாக்க (Basic computer programming) திறனை வளர்த்துக் கொண்டு, அதைத் தமிழ்மொழி கற்றுலுக்குப் பயன்படுத்த வேண் டும் என்பதற்காக திரு செம்பியன் சோமசுந்தரம், 25, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான 'குறியீடு, விளையாடு' எனும் இரண்டு நாள் பயிலரங்கை ஏற்பாடு செய்தார். 'எஸ்ஐஏ' பொறியியல் நிறு வனத்தில் நிர்வாகியாகப் பணி புரியும் இவர், கடந்த ஆண்டு மீடியாகார்ப் தமிழ்ச்செய்தி வழங் கிய தமிழ்ச்சுடர் விருதை வென் றவர்.
நிரலாக்கத்தைப் பயன்படுத்தி சுவாரசியமான விளையாட்டு களைத் தமிழ்மொழியில் உரு வாக்கி மாணவர்களிடையே தமிழ் மொழி கற்றலை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இப்பயிலரங்கை இம்மாதம் 3, 4ஆம் தேதிகளில் மீடியாகார்ப் தமிழ்ச்செய்தி, தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழு வுடன் இணைந்து ஏற்பாடு செய் தார். உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்ற இந்தப் பயிலரங்கை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக கணினி அறி வியல் துறை விரிவுரையாளர் திரு ரவி சுப்பையா, 40, நடத்தினார்.
உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடந்த இரண்டு நாள் அடிப்படை கணினி நிரலாக்கப் பயிலரங்கில் தொடக்கப்பள்ளி மாணவர்கள் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

