பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்த ஓவியக் கண்காட்சி

பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்த ஓவியக் கண்காட்சி

1 mins read
96519237-acab-4db6-8fb9-36e21254517b
-

பாரம்பரியம், கட்டடக்கலை, இயற்கை ஆகிய கருப்பொருட்களின் தொடர்பில் கிட்டத்தட்ட 150 ஓவியப் படைப்புகளை விக்டோரியா ஸ்திரீட்டில் உள்ள நூலக வாரியக் கட்டடத்தில் நேற்று நடைபெற்ற தமது முதல் ஓவியக் கண்காட்சியில் எழுத்தாளரும் ஓவியருமான ஜெயந்தி சங்கர் (படத்தில் வலது) காட்சிப்படுத்தி இருந்தார். காலை 10 மணிக்குத் தொடங்கிய கண்காட்சி இரவு 8 மணி வரை நடைபெற்றது. பிற்பகல் 3 மணிக்கு 'ஆசியாவில் ஓவியக் கலையின் வளர்ச்சி' என்ற தலைப்பிலும் அதனைத் தொடர்ந்து 'எவ்வாறு ஓவிய உலகிற்குள் சென்றேன்' என்ற தலைப்பிலும் திருமதி ஜெயந்தி உரையாற்றினார். மாலை 5 மணிக்கு பார்வையாளர்களின் முன்னிலையில் அரங்கிலேயே ஓவியம் வரைந்து அசத்தினார் இவர்.

நானூற்றுக்கும் மேற்பட்டோர் பார்வையிட்ட இந்த ஓவியக் கண்காட்சியின் அனைத்து நிகழ்வுகளிலும் இளம் வயதினர் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர். படம்: தேசிய நூலக வாரியம்