எஸ்.வெங்கடேஷ்வரன்
தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையிலான யுத்தத்தை கடவுள், சாத்தன், மனிதன் ஆகிய மூன்று விதக் கண்ணோட்டங்களாகப் பரத நாட்டிய வடிவத்தில் படைக்க விருக்கிறார்கள் செல்வி கல்பனா சிவன், செல்வி சுகன்யா ரமணன், செல்வி வர்ஷா விஸ்வநாத். இப்பெண்கள், பரதத்தில் பல அனுபவங்களையும் அதிக நாட்டத்தையும் கொண்டவர் கள். இப்படைப்பின் நடன அமைப்பை உருவாக்கியவர் பிரபல பரதநாட்டிய வல்லுநரான சவிதா சாஸ்திரி, 48. பாரம்பரிய பரதநாட்டியத்தை நவீன முறையில் அமைப்பவராக இவர் நன்கு அறியப்படுகிறார். சமயம், தொன்மவியல் போன்ற வற்றைத் தவிர்த்து புதிய கதை களைப் பரதம் மூலம் வெளிப் படுத்தும் வகையில் இவர் படைப்பு கள் அமைகின்றன.
கண்களுக்கும் செவிகளுக்கும் விருந்தாக அமையவுள்ள இந் நடனம் ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் நிகழும். இரண்டு நாட்களிலும் இந்த நிகழ்ச்சி மாலை 8 மணிக்குத் தொடங்கும். தேசிய கலைகள் மன்றத்தின் ஆதரவுடன் நடத்தப்படும் இந் நிகழ்ச்சியை மீடியாகார்ப் நிறுவனத் தின் இந்தியர் ரசிகர்கள் பிரிவின் தலைவரான சபானித்தா சண்முக சுந்தரம் வழிநடத்துகிறார். விரும்பியவர்கள் தங்கள் நுழைவுச்சீட்டுகளை https://www. sistic.com.sg/events/cone0918 என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம். மேல் விவரங்களுக்கு https:// www.facebook.com/events/ 283880652197584 என்ற ஃபேஸ்புக் பக்கத்தை நாடலாம்.

