மல்லித்தூள் தடவிய குறும்பாட்டு வறுவல்

மல்லித்தூள் தடவிய குறும்பாட்டு வறுவல்

2 mins read
47be44f6-2576-42a2-8775-9a62034398aa
-

மல்லித்தூள் தடவிய குறும்பாட்டு வறுவல் வறுவலுக்குத் தேவையானவை:

குறும்பாட்டு இறைச்சி - 3

துண்டுகள் (Racks)

இஞ்சி, பூண்டு விழுது - 20 கி.

உப்பு - தேவையான அளவு

கரம் மசாலா - 5 கி.

கடுகு எண்ணெய் - 10 கி

எலுமிச்சைச் சாறு - சிறிதளவு

சாஸ் செய்ய தேவையானவை:

எண்ணெய் - 60 கிராம் (கி)

கிராம்பு - 3, ஏலக்காய் - 4

நறுக்கிய வெங்காயம் - 350 கி.

பூண்டு விழுது - 10 கி.

இஞ்சி விழுது - 10 கி.

சிவப்பு மிளகாய்ப்பொடி - 10 கி.

மல்லித்தூள் - 7 கி.

சீரகம் - 5 கி.

கரம் மசாலா - 5 கி.

மிளகு - 5 கி.

தண்ணீர் - 40 கி.

தக்காளி - 150 கி.

வெந்தயக் கீரைப் பொடி - 2 கி.

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

 கழுவிய இறைச்சியுடன் ஊறவைக்கத் தேவையான பொருட்களைச் சேர்த்து நன்கு கலந்து 30 நிமிடம் ஊறவைக்கவும்.  மல்லி, மிளகு, சிவப்பு மிளகாயை எண்ணெய் ஊற்றாமல் வறுத்துப் பொடித்து இறைச்சியின் மீது தடவவும். பின்னர் அதனை வாணலியில் கடுகு எண்ணெய் ஊற்றி இரு புறமும் வேகவிட்டு எடுக்கவும். 12 நிமிடங்கள் வேகவிட்டால் போதுமானது.  ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்க்கவும். நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வறுத்து அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்ப்பொடி, மல்லித்தூள், சீரகத்தூள், கரம் மசாலா சேர்க்கவும். அத்துடன் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பச்சை வாசனை போனதும் வெந்தயக் கீரைப் பொடியைத் தூவி இறக்கவும்.  இந்த சாஸை குறும்பாட்டு வறுவலுடன் சேர்த்துப் பரிமாறலாம்.