மக்கள் கவிஞர் மன்றம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் 65ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு சனிக்கிழமை (அக்டோபர் 19) மாலை 6 மணிக்கு தேசிய நூலக வாரியத்தின் 5ஆம் தளத்தில் உள்ள பாசிபிலிட்டி அறையில் ஏற்பாடு செய்துள்ளது. வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் நசீர் கனி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவிருக்கிறார். பேச்சாளர் திரு இரா ஸ்டாலின் போஸ், இயன்முறை மருத்துவர் ஆர். ஜனார்த்தனன், மாணவர் அக்ஷிதா சுரேஷ் ஆகியோர் உரையாற்றுகிறார்கள்.
‘விதியை எண்ணி வீழ்ந்து கிடப்போர் விழித்தெழ! காயமே இது மெய்தான் அதில் கண்ணும் கருத்தும் வைப்பது எப்படி?’ என்ற திருக்குறள் சிந்தனைகள் நிறைந்த மக்கள் கவிஞரின் வரிகள் சுவைபட விளக்கப்படுவதை நிகழ்ச்சியில் கேட்கலாம். வெளிநாடுகளில் இருப்போர், நிகழ்ச்சியை ‘மக்கள் கவிஞர் மன்றம்’ ஃபேஸ்புக் பக்கத்திலும், mkm.org.sg என்ற இணையப்பக்கத்திலும் நேரலை மூலம் காணலாம். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனைவரையும் அழைக்கிறது மக்கள் கவிஞர் மன்றம்.