லிஷாவின் ஆதரவில் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் பட்டிமன்றம் கேம்பல் லேனில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மேடையில் இம்மாதம் 8ஆம் தேதி நடைபெற்றது. 'பழமை' என்ற அணியில் முனைவர் ராஜி சீனிவாசன், திரு ராஜா, திருமதி அகிலா ஹரிஹரன் ஆகியோரும், 'புதுமை' என்ற அணியில் திரு ராம்குமார், முனைவர் எமர்சன் ராஜா, திரு சேஷாத்திரி கண்ணன் ஆகி யோரும் வாதிட்டனர். இந்தியாவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் பழையவை. இப் பொழுது செல்லாது. பழையவை எப்போதுமே செல்லாது. செல்லாது என்று அறிவித்ததால் மக்கள் பட்ட அவதி தெரியுமா? கம்ப ராமாயணம் போன்ற புராண இதிகாசங்கள் பழமைவாய்ந்தவை தான். அதற்காக மறந்துவிடு வீர்களா? பழமைதான், ஆனால் விளக்கங்கள் புதுமையாகச் சொல்லப்படுகின்றன.
ஜல்லிக்கட்டுக்குத் தடை ஏன்?
ஏறு தழுவுதல் என்ற பழைய பாரம்பரியத்தை நீங்கள் மறந்ததால் தான். சரி. ஏறு தழுவுதல் என்று மாற்றிக்கொள்வோம். ஏடிஎம்மில் புதிதாக தமிழ் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது. எங்களுக்குப் பழைய முறைதான் வேண்டும். நாங்கள் ஆங்கிலத்தைத்தான் பயன்படுத்துவோம் என்று பேச வந்திருக்கும் பழமை பிற்போக் கானது. ஆம் பழங்கால நாணயங் களை, கற்களை, பொருள்களை, பல ஆயிரம் கொடுத்து வாங்கு கிறவர்கள் உங்கள் கணக்குப்படி பழமைவாதிகள்தான். அந்தப் பழமைக்கு விலை அதிகம். ஏழு சுரங்கள் பழையவைதான். ஏற்றுக்கொள்கிறோம். அதில் புதுமையைக் கையாளாவிட்டால் இளையராஜா எப்போதோ காணாமல் போயிருப்பார்.
(இடமிருந்து வலம்) திருமதி அகிலா ஹரிஹரன், முனைவர் ராஜி சீனிவாசன், திரு கே.வி. ராஜா, அவைத் தலைவர் திரு யூசுப் ரஜீத், திரு ச. இராம்குமார், முனைவர் எமர்சன் ராஜா, திரு சேஷாத்திரி கண்ணன். படம்: லிஷா

