சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் கதைக்களத்தில் உள்ளூர் எழுத்தாளர் மில்லத் அகமதின் ‘ஆந்தை’ திரைப்படத்தின் முதல் காட்சிக்கும், கதை பற்றிய கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 25) மாலை 5 மணிக்கு, விக்டோரியா சாலையிலுள்ள தேசிய நூலகக் கட்டடத்தின் அடித்தளத்திலுள்ள (பி1) ‘புரோகிராம்’ அறை 2ல் இந்நிகழ்ச்சி நடைபெறும்.
இந்நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் இரா. தினகரன் கலந்துகொள்கிறார். மேலும் முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன், முனைவர் மன்னை க. இராஜகோபாலன், திரு. மா. அர்ச்சுனன் ஆகியோர் கலந்துரையாடலில் பங்குபெறுகிறார்கள்.
பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமைகளைப் பற்றியும், போபியா என்ற நோயால் பாதிக்கப்பட்ட கதாநாயகி பற்றியும் வட இந்தியாவிலிருந்து தமிழகத்திற்கு வரும் சைக்கோ கொலைகாரன் பற்றியும் ‘ஆந்தை’ திரைப்படம் பேசுகிறது.
இந்தக் கட்டணமில்லா திரையீட்டுக்கு முன்பதிவு அவசியம். இந்தத் திரைப்படம் PG13 சான்றிதழ் பெற்றிருப்பதால் 13 வயதுக்கும் கீழே உள்ள சிறுவர்கள் பெற்றோருடன் வரவேண்டும் என்று அறிவுறுத்துகிறோம். முன்பதிவுக்கு https://forms.gle/oFuFLghvGdT4wKR59 என்ற கூகல் படிவத்தில் பதிந்துகொள்ளலாம்.