தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜோயாலுக்காஸின் புதிய உலகத் தூதராக நடிகை சமந்தா

2 mins read
bd37eba4-b3c8-4f12-b2db-53b6b9352385
நடிகை சமந்தா ரூத் பிரபு. - படம்: ஜோயாலுக்காஸ்

நகை விற்பனையில் உலகளவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் ஜோயாலுக்காஸ், நடிகை சமந்தா ரூத் பிரபுவை தனது புதிய விளம்பரத் தூதராக நியமித்துள்ளது.

இது, தனது நகைகளின் காலத்தால் அழியாத நேர்த்தியையும் உலகளவில் கைவினை மரபையும் புதிய வெளிச்சத்திற்குக் கொண்டுவர உதவும் என ஜோயாலுக்காஸ் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தம் நடிப்பால் பலரையும் கவர்ந்துள்ள சமந்தா, உலகச் சந்தைகளில் ஜோயாலுக்காசின் தனிச்சிறப்புமிக்க நகைத் தொகுப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்த இதில் இணைந்துள்ளார்.

இந்தப் பங்காளித்துவமானது, கம்பீரம், தன்னம்பிக்கையுடன் சமகாலப் பெண்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் ஒருவருடன் தனது முத்திரையை வலுப்படுத்துவதால் ஜோயாலுக்காசிற்கு இது ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது.

“சமந்தா உண்மையான தனித்துவத்துடன் கூடிய நவீனப் பெண்ணின் உணர்வை உள்ளடக்கியுள்ளார். உயர்தர அணிகலன்கள் மூலம் வாழ்க்கையின் பொன்னான தருணங்களைக் கொண்டாடும் எங்கள் நெறிமுறைகளுடன் அவரது தனித்துவ அழகு சரியாக இணைகிறது. அவரை ஜோயாலுக்காஸ் குடும்பத்திற்கு வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று ஜோயாலுக்காஸ் குழுமத்தின் தலைவர் டாக்டர் ஜோய் ஆலுக்காஸ் கூறினார்.

தமிழ், தெலுங்கு, இந்தித் திரையுலகில் விருது பெற்ற திரைப்படங்களில் நடித்த அனுபவத்துடன் சமந்தா ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே ஈர்த்திருக்கிறார்.

உலகளவில் ஜோயாலுக்காசைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரு விளம்பரத் தூதர்களில் ஒருவராக அவர், நடிகை கஜோலுடன் இணைகிறார்.

“நகை எப்போதும் என் விருப்பங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. உலகின் ஒவ்வொரு பெண்ணையும் நம்பிக்கையுடன் ஒளிர ஊக்குவிக்கும் ஒரு நிறுவனத்துடன் இணைவதில் நான் உற்சாகமடைகிறேன்,” என்று சமந்தா கூறினார்.

இந்தப் பங்களிப்பு வரும் மாதங்களில் புதிய உலகளாவிய ஒருங்கிணைந்த இயக்கத்துடன் அறிமுகமாகும்.

அதில் ஜோயாலுக்காஸின் பலதரப்பட்ட வடிவமைப்புப் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் விளம்பரத் தொடர்களில் சமந்தா இடம்பெறுவார்.

ஜோயாலுக்காஸ் நிறுவனத்திற்கு 11 நாடுகளில் 160க்கும் மேற்பட்ட நகைக்கடைகள் உள்ளன. உயர்மட்ட விளம்பரத் தூதர்கள், புதுமையான இயக்கங்கள் மூலம் தனது வணிகத்தை அந்நிறுவனம் உலகளவில் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது.

குறிப்புச் சொற்கள்