ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் மூலிகைகளை பெரும்பாலும் இந்திய உணவு வகைகளில் காணலாம். அவற்றில் சிலவற்றைச் சரும பராமரிப்புக்கும் ஆரோக்கியத்துக்கும் பயன்படுத்தலாம்.
துளசி
மருத்துவ நன்மைகளுக்கு நன்கு அறியப்பட்ட துளசி இலை, முகச் சுருக்கங்களைக் குறைக்க உதவுகிறது. இது சருமத்தின் அமைப்பை மென்மையாக்கவும் உதவும்.
சந்தனம்
நறுமணம் கமழும் சந்தனத்துக்குக் குளிரூட்டும் சக்தி அதிகம். இது வெயில்பட்ட மேனிறம் (tan skin), கரும்புள்ளிகளைச் சரிசெய்து சருமத்திற்குப் பொலிவு தரும்.
கற்றாழை
அழகுச் சாதனப் பொருள்களில் அதிகம் காணப்படும் ஆயுர்வேத மூலிகைகளில் ஒன்று கற்றாழை (aloe vera). அதன் அழற்சி எதிர்ப்பு, குளிர்ச்சித் தன்மையால் வறண்ட சருமம், தடிப்புகள், தொற்றுகள், பருக்கள், ஒவ்வாமைகள் ஆகியவற்றுக்காக அது அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.
நெல்லிக்காய்
வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றம் அதிகமாக உள்ள நெல்லிக்காய் பெரும்பாலும் இளமையான தோற்றத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன், அதிகப்படியான மன அழுத்தம் மற்றும் அழுத்தத்தின் எதிர்மறை விளைவுகளிலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கவும் நெல்லிக்காய் உதவுகிறது.
குங்குமப்பூ
விலையுயர்ந்த மூலிகையாக இருந்தாலும், சிறிதளவு குங்குமப்பூ சருமத்தை ஈரப்பதமாக்கி தீவிர சருமப் பாதிப்பைத் தடுக்கும். குங்குமப்பூவில் கொஞ்சம் தேன் சேர்த்துக்கொள்வதால் சருமம் பொலிவடையும்.
அஸ்வகந்தா
தோல், முடி, பொது நல்வாழ்வுக்குப் புத்துணர்ச்சியூட்டும் ஆற்றல்களுக்கும் நன்மைகளுக்கும் புகழ்பெற்ற அஸ்வகந்தா செடி, சருமத்தை உறுதிப்படுத்தவும் சுருக்கங்களைக் குறைக்கவும் உதவுகிறது.
வேம்பு
ஆக்ஸிஜனேற்றப் பண்புகள் நிறைந்த வேப்ப இலைகள் பொதுவாக ஆயுர்வேத மற்றும் நவீன மருந்துகள் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகின்றன. வேப்ப இலையிலிருந்து வடியும் எண்ணெய் சருமத் துளைகளைத் தடுப்பதன் மூலம் மாசுக்களை அகற்றி, அரிக்கும் தோலழற்சியையும் வறண்ட சருமத்தையும் எதிர்த்து போராடுகிறது. மேலும், கண்களுக்குக் கீழே உள்ள கருமையைக் குறைக்க வேம்பு பயன்படுத்தப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
மஞ்சள்
ஆரோக்கியமான வாழ்க்கை முதல் ஆரோக்கியமான சருமம் வரை மஞ்சள் அதன் பல்வேறு நன்மைகளுக்காக அறியப்படுகிறது. குறிப்பாக, இதன் அழற்சி எதிர்ப்பு சக்தி சருமத்தை பொலிவாக்கி இளமையாகத் தோற்றமளிக்கப் பயன்படுத்தப்படுகிறது.