நீருக்குள் வாய்ப்பாட்டுப் பயிற்சியால் ஏற்படும் நன்மைகள்

நீருக்குள் வாய்ப்பாட்டுப் பயிற்சியால் ஏற்படும் நன்மைகள்

1 mins read
2f155f72-6855-4006-a327-5e0046bd7917
நீருக்குள் வாய்ப்பாட்டுப் பயிற்சியால் ஏற்படும் நன்மைகள் பல. - படம்: பிக்சாபே

சிறந்த பாடகர்கள் நாள் ஒன்றுக்கு சில மணி நேரமாவது பயிற்சி செய்ய வேண்டும். பயிற்சி செய்வதற்கான பல்வேறு முறைகளில் ஒன்று, ஆற்றில் அல்லது குளத்தில் இறங்கி கழுத்துவரை நீர்மட்டம் வரும் அளவுக்கு பயிற்சி செய்வதாகும்.

இவ்வாறு பண்டையக் காலத்தில் உருத்திர பசுபதி நாயனார் குளத்திற்குள் வேதம் ஓதியதாக பெரிய புராணம் குறிப்பிடுகிறது. தற்காலத்தில் குவீன் இசைக்குழுவின் முன்னணிப் பாடகர் ஃப்ரெடி மெர்க்கியுரி, ஓப்ரா பாடகர்கள் பார்பரா ஹென்ட்ரிக்ஸ், மார்னி நிக்சன் உள்ளிட்டோரும் குளத்திற்குள் இறங்கி சாதகம் மேற்கொள்கின்றனர்.

நீருக்குள் வாய்ப்பாட்டுப் பயிற்சியால் ஏற்படும் நன்மைகள்:

மூச்சுக் கட்டுப்பாடு மேம்படுகிறது: நீரை எதிர்த்து தொண்டையும் நுரையீரலும் விரியும்போது அவற்றின் தசைகள் வலுவாகும். அது, பாடுவதற்குத் தேவைப்படும் மூச்சுக் கட்டுப்பாட்டுக்கு உதவுகிறது.

ஈரத்தன்மை உள்ள சூழல்: ஈரத்தன்மை உள்ள இடத்தில் பாட பயிற்சி பெறுவதன் மூலம் குரல்வளைகளின் (vocal cords) ஈரத்தன்மையும் கூடுகின்றன. குரல் வளையின் ஆரோக்கியத்திற்கு இந்த ஈரத்தன்மைமிக்க சூழல் நல்லது என ‘வாய்ஸ் ஆஃப் ஜர்னல்ஸ்’ போன்ற ஆய்வுத் தொகுப்புகள் காட்டுகின்றன.

சத்தத்தின் எதிரலை: தண்ணீருக்குள் நின்று பாடும்போது குரலின் சுருதியும் சுவரசுத்தமும் இன்னும் தெளிவாக கேட்கும்.

கூடுதல் இதம்: தண்ணீருக்குள் உடல் மூழ்குவதால் அதன் இறுக்கத்தன்மை குறையும். குரல் இலேசாகும்.

இருந்தபோதும், குளோரின் வேதிப்பொருள் இருக்கும் நீச்சல் குளங்களில் இத்தகைய பயிற்சி மேற்கொள்வது குரலைப் பாதிக்கக்கூடும். அத்துடன், இயற்கையான நீர்நிலைகளில் ஆபத்து நேரும் அபாயம் உள்ளதால் உங்கள் துணைக்காக இன்னொருவரை அழைத்துச் செல்வது நல்லது.

குறிப்புச் சொற்கள்