புற்றுநோய் உண்டாக்கும் தன்மை உடைய முகப்பரு களிம்புகள்

2 mins read
c330a44e-a25c-455d-aa37-fd1da44a51cc
புற்றுநோய் உண்டாக்கும் தன்மை உடைய முகப்பரு களிம்புகள். - படம்: கெட்டி இமேஜஸ்

அமெரிக்க அறிக்கை ஒன்றில் அண்மையில் முகப்பரு களிம்புகளில் ‘பென்சாயில் பெராக்சைடு’ (Benzoyl peroxide) எனும் ரசாயனம் சேர்க்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டது.

இந்த ரசாயனத்தால் ‘பென்சீன்’ எனும் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனத்தை உருவாக்க முடியும். நம்மில் பலரும் இளம் பருவத்தில் முகப்பரு பிரச்சினையை எதிர்நோக்கி இருப்போம்.

அதனைக் குணமாக்க பல முகக் களிம்புகளைப் பயன்படுத்தியிருப்போம். ஆனால், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துக்கு ஓர் ஆய்வுக்கூடம் அனுப்பியிருந்த அறிக்கையில், முகப்பருக்களுக்குப் பயன்படுத்தும் பெரும்பாலான களிம்புகள் புற்றுநோய் உண்டாக்கும் தன்மை கொண்டவை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

குறிப்பாக மருந்தகங்களில் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் களிம்புகளிலும் பெரியளவில் ‘பென்சாயில் பெராக்சைடு’ கலக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. ‘பென்சாயில் பெராக்சைடு’ முகப்பருக்களை உண்டாக்கும் நுண்ணுயிரிகளை அழிக்கும் தன்மை கொண்டது.

சிங்கப்பூரில் நிலைமை எவ்வாறு

முகப்பரு களிம்புகளில் ஏற்கெனவே ‘பென்சாயில் பெராக்சைடு’ மூலப்பொருளாகச் சேர்க்கப்பட்டிருந்தால், அது ஏற்புடைய அளவில் இருந்தால்தான் அவை விற்பனை செய்யப்படும்.

முகப்பரு களிம்பில் 2.5% அளவு ‘பென்சாயில் பெராக்சைடு’ இருந்தால் அது பயன்படுத்த பாதுகாப்பானது. அந்த அளவைத் தாண்டினால், அது ஒருவரின் முகப்பருக்களை விரைவாகக் குறைக்கும் என்பதும் அர்த்தமில்லை.

‘பென்சாயில் பெராக்சைடு’ பென்சீனாக மாறுவதைத் தடுக்க முகப்பரு களிம்புகள் குளிர்ந்த, வெயில் இல்லாத இடத்தில் வைக்கப்பட வேண்டும் என்று சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்தது.

முகப்பரு களிம்புகளில் ‘பென்சாயில் பெராக்சைடு’க்குப் பதிலாக இதர மூலப்பொருள்கள் பயன்படுத்த பாதுகாப்பானவை. ‘ரெட்டினாய்டு’, ‘ரெட்டினொல்’, ‘அஸிளைக் அமிலம்’, ‘ஹைட்ராக்சி அமிலம்’, ‘மேற்பூச்சு கிருமியொடுக்கி’, ‘நியாசினமைட்’ போன்ற மூலப்பொருள்கள் கலக்கப்பட்ட களிம்புகள் பாதுகாப்பானவை என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்