தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வரலாற்றையும் பண்பாட்டையும் அனுபவிக்க ‘சிறுவர்களின் பருவகாலம்’

2 mins read
1a64aa93-0f25-42c7-a174-878977744d8e
இந்திய மரபுடைமை நிலையம் நடத்தும் ‘சிறுவர்களின் பருவகாலம்’ என்ற பொது வரவேற்பின் விளம்பரப் பதாகை. - படம்: இந்திய மரபுடைமை நிலையம்
multi-img1 of 2

சிறார்களுக்கு சிங்கப்பூர் வரலாறு, பண்பாடு, சமூகம் போன்ற கூறுகளைக் கற்பிக்கும் விதமாக ‘சிறுவர்களின் பருவகாலம்’ என்ற பொது வரவேற்பு நிகழ்ச்சி இந்திய மரபுடைமை நிலையத்தில் இடம்பெறவுள்ளது.

‘உரிமைப்பாடு’ என்ற கருப்பொருளில் அமைந்த இந்தப் பொது வரவேற்பு மே 31ஆம் தேதியிலிருந்து ஜூன் 29 வரை நடைபெறும். இந்தக் கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டிருக்கும்.

சிறுவர்களின் கற்பனைத் திறனை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்குப் பலதரப்பட்ட ஆர்வமூட்டும் நடவடிக்கைகளும், பயிலரங்குகளும், நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

5 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்காக இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இதன்வழி, சிறுவர்கள் தங்களது மரபையும் வேர்களையும் பற்றி ஆழமாக அறிந்துகொள்ளலாம். 

சிங்கப்பூரின் தொடக்கக் காலத்தில் இங்கு வாழ்ந்த இந்தியர்கள் மேற்கொண்ட வணிகங்கள், தொழில்கள் குறித்தும், அவை சிங்கப்பூரின் முன்னேற்றத்திற்கு எவ்வாறு வழிவகுத்தன என்பது குறித்தும் சிறார்கள் விரிவாக அறிந்துகொள்ள இந்நிகழ்ச்சி நல்வாய்ப்பாக அமைகிறது. 

இந்திய மரபுடைமை நிலையம் ஆண்டுதோறும் இதுபோன்ற பொது வரவேற்பு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. 

இந்தக் கண்காட்சிகள், நிகழ்ச்சிகள் சிறுவர்கள் தங்களது அடையாளத்தை ஆராய ஊக்குவிக்கின்றன.

இந்தியப் பண்பாட்டு உடைகள் தொடங்கி, இந்திய நடனக் கலைகள், மகாபாரதம், ராமாயணம் உள்ளிட்ட காப்பியங்கள் என பல்வேறு மரபுசார் அம்சங்களைப் பற்றி மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் நிகழ்ச்சிகள் அமையும்.

மேலும், மேடை நாடகங்கள் போன்ற பல உற்சாகமூட்டும் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவற்றில் சில நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இலவசம் என்றும் சில நிகழ்ச்சிகளுக்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் நிலையம் தெரிவித்தது.

இந்தப் பொது வரவேற்பு குறித்த மேல்விவரங்களுக்கு இந்த இணையத்தளத்தை நாடலாம்: https://www.indianheritage.gov.sg/en/whats-on/programmes/childrens-season-2025 

குறிப்புச் சொற்கள்