ஜூன் பள்ளி விடுமுறையில் ஹோம் டீம் என்எஸ்க்கு செல்லுங்கள்
ஜூன் பள்ளி விடுமுறையில் உங்கள் குழந்தைகளை மகிழ்விக்க ஹோம் டீம் என்எஸ்ஸைத் தேர்ந்தெடுங்கள்!
🔹குடும்ப விளையாட்டு திருவிழா @ காத்திப் - சிறுவர்களுக்காகப் படைக்கப்பட்டுள்ளது
🔹 ஸ்கில்ஃபெஸ்ட் (வயது 8–12) - பல கிளப்ஹவுஸ்களில் திறன் வளர்ப்பு
🔹 சாகசம், நடவடிக்கை - சவாலான விளையாட்டு அங்கங்கள்
🔹 ஆக்வா சாகசம் – - ஐந்து வயதிற்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கான நீர்விளையாட்டுகள்
🔹 லேசர் குவெஸ்ட் @ புக்கிட் பாத்தோக் - குடும்பத்துடனும் நண்பர்களுடனும் லேசர் விளையாட்டில் ஈடுபடுங்கள்.
🔹விளையாட்டுப் பண்ணை - பண்புநலன்கள் நிரம்பிய பல விளையாட்டுகள்.
இவற்றில் பங்கெடுத்தால் முழுக் குடும்பத்திற்கும் சிறந்த அனுபவமாக அமையும்!
தொடர்புடைய செய்திகள்
தேதி, நேரம்: ஜூன் பள்ளி விடுமுறைகளின்போது பல்வேறு தேதிகளில், நேரங்களில்
இடம்: ஹோம் டீம் என்எஸ் வளாகங்கள் - புக்கிட் பாத்தோக், காத்திப், பிடோக் ரிசர்வோர்
கட்டணம்: ஒருவருக்கு $4.25லிருந்து
வாருங்கள், ஒரு சிறிய பண்ணையை உருவாக்குவோம்
ஜூன் பள்ளி விடுமுறையில் குழந்தைகளுக்கு விளையாட்டு மூலம் விவசாயத்தைப் பற்றி கற்றுக் கொடுப்போம்.
🔹சிறிய விவசாய அனுபவம் @ டெய்ரி ஃபார்ம் மால் - ஒரு நாள் மட்டும் ஒரு விவசாயியாக இருப்பது எப்படி என்பதை அவர்கள் அறிந்துகொண்டு, ஒரு பண்ணையை எவ்வாறு உருவாக்குவது என்பதைக் கற்றுக்கொள்வார்கள்.
🔹 பண்ணைச் சுற்றுலா - இந்தச் சுற்றுலாவில் நேரடியாக கதை சொல்லுதல், விலங்கு நிகழ்ச்சிகள், ஓவியம் வரைதல் என ஏராளமான நிகழ்ச்சிகள் இருக்கும்.
🔹 கூடுதல் நடவடிக்கைகள் - சிறிய பந்துக் குழி, இலவசப் பனிக்கூழ், பாப்கார்ன்!
இந்தச் சுற்றுலாவின் மூலம் வித்தியாசமான கல்வி சார்ந்த, மகிழ்ச்சிகரமான அனுபவத்தைப் பெறலாம்!
தேதி, நேரம்: 1 ஜூன் 2025, நண்பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை (3 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஏற்றது)
இடம்: டெய்ரி ஃபார்ம் மால், 4 டெய்ரி ஃபார்ம் லேன், சிங்கப்பூர் 677622
கட்டணம்: இலவசம்
மண்டாய் விலங்கியல் தோட்டப்பள்ளிக்கு வந்து சேருங்கள்
🔹 மண்டாய் விலங்கியல் தோட்டம் (2 ஜூன்) – சிங்கப்பூரின் முதல் வனவிலங்கு சாகசப் பள்ளி 🔹 வயது 3 -12 – விலங்குகள் குறித்தும் அருகிவரும் சில விலங்கு வகைகளின் வாழுமிடங்கள் குறித்தும் பிள்ளைகள் மேலும் அறிந்துகொள்வார்கள்.
🔹 விலங்கியல் தோட்ட பராமரிப்பாளர் அனுபவம் – விலங்கியல் காட்சி சாலையை எவ்வாறு பராமரிப்பது என்பது பற்றிய அனுபவங்களையும் தகவல்களையும் சிறுவர்கள் பெறலாம். 🔹 2 மணி நேரம் அல்லது ஒரு நாள் முகாம் – இயற்கை பற்றிய கற்றல், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் ஆர்வத்தை வளர்க்கும் பயணம்!
தேதி, நேரம்: பல்வேறு தேதிகள்
இடம்: 80 மண்டாய் லேக் சாலை, சிங்கப்பூர் 729826
கட்டணம்: $62லிருந்து
பின்னலோ சிறுவர் காட்சிக்கூடத்தைச் சுற்றிப் பாருங்கள்
🔹 பின்னலோ சிறுவர் காட்சிக்கூடம் – குதூகலம் நிரம்பிய எட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் 🔹 அனைத்து வயதினருக்கும் ஏற்றது – மகத்தான கலைக்காட்சிகள், கற்றல், மகிழ்ச்சி நிறைந்த அனுபவம் 🔹 குழந்தைகளுக்கான கலாசார சஞ்சாரம் – கலை, விளையாட்டு, கற்பனை சங்கமிக்கும் இடம்
அனைத்துக் குழந்தைகளும் மகிழும் ஓர் அருமையான அனுபவம்!
தேதி, நேரம்: 31 மே 2025 – 29 மார்ச் 2026
இடம்: பின்னலோ சிறுவர் காட்சிக்கூடம்
கட்டணம்: சிங்கப்பூரர்களுக்கும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகளுக்கும் இலவசம்.
சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தில் சிறுவர்களுக்கான கோடைக்கால நிகழ்ச்சிகள் 2025
🔹 தேசிய அரும்பொருளகத்தில் சிறுவர்களின் கோடைக்காலம் 2025 – இலவசக் காட்சிகள், கதை சொல்லுதல், அரிய பொருள்களுக்கான விளையாட்டு வேட்டை 🔹 சிறிய ‘மாமா’ கடையில் கடைக்காரர் அனுபவம்
🔹கட்டணமுடைய பயிலரங்குகள் – சென்சரி விளையாட்டு நிலையங்கள், புத்தாக்கப் படைப்பாற்றல் பட்டறைகள்.
வரலாற்றை வேடிக்கையுடன் கற்றுக்கொள்ள சிறந்த வாய்ப்பு!
தேதி: 24 மே - 29 ஜூன் 2025
இடம்: சிங்கப்பூர் தேசிய அருங்காட்சியகம்
கட்டணம்: இலவசம்

