அனைத்து வயதினரும் மகிழ்வோடு ஈடுபடும் பண்டிகை நிகழ்ச்சிகளை இந்த கிறிஸ்துமஸ் விடுமுறையின்போது தவறவிடாதீர்கள்.
கேப்பிட்டோல் சிங்கப்பூர்
டிசம்பர் 25ஆம் தேதிவரை இரவு 7 மணி முதல் 10 மணி வரை ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் கேப்பிட்டோலின் வெளிப்புற பிளாசாவில் மனங்கவரும் பனிப்பொழிவை அனுபவிக்கலாம். கிறிஸ்துமஸ் நாளன்று பிரபல கிறிஸ்துமஸ் பாடல்களை ‘தி சிங்கிங் டிரீ’ அருகில் கேட்டு கொண்டாட்ட உணர்வில் திளைக்கலாம்.
சைம்ஸ் (CHIJMES)
சைம்சில் நாள்தோறும் இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் ஒளிபாய்ச்சும் நிகழ்ச்சியைக் கண்டு மகிழுங்கள். அதனுடன், பண்டிகைக் கால தள்ளுபடிகளைக் கொண்ட பெரிய அட்வென்ட் நாள்காட்டியையும் இங்கு பார்க்கலாம்.
தி ஃபுல்லர்டன் ஹோட்டல்
மரினா பே 2025 கவுன்ட் டவுனின் ஒரு பகுதியாக தி ஃபுல்லர்ட்டன் ஹோட்டலில் ஒளிபாய்ச்சும் நிகழ்ச்சியை டிசம்பர் 26ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதிவரை கண்டுகளிக்கலாம்.
ஆர்ட்டிஸ் கலை அமைப்பைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட இந்த கலைப்படைப்புகள், மீட்சித்தன்மையையும் படைப்பாற்றலையும் கொண்டாடுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
பாசிர் ரிஸ் மால்
தனித்துவமான கிறிஸ்துமஸ் பரிசுகள், அழகான கைவினைப்பொருள்கள், கிறிஸ்துமஸ் தொடர்பான பட்டறைகள் ஆகியவை இடம்பெறும் மெர்ரி மேக்கர்ஸ் சந்தையில் கலந்துகொள்ள டிசம்பர் 9ஆம் தேதி முதல் டிசம்பர் 26ஆம் தேதிவரை பாசிர் ரிஸ் மாலிற்குச் செல்லலாம்.
தனிப்பயன் சார்ந்த ‘டோட்’ பைகள், இசைப் பெட்டிகள் முதலியவற்றை அங்கு நீங்கள் குடும்பத்தினரோடு சேர்ந்து உருவாக்கலாம்.
ராஃபிள்ஸ் பிளேஸ்
வண்ணமய ஒளிவளைவுகள், ஹாலோகிராஃபிக் பரிசுப் பெட்டிகள் என, ராஃபிள்ஸ் பிளேசில் அமைக்கப்பட்டுள்ள படைப்புகளை இந்த விடுமுறைக் காலத்தில் பார்க்கலாம்.
ஓஷன் ஃபைனான்சியல் சென்டர், ஒன் ராஃபிள்ஸ் பிளேஸ், ரிபப்ளிக் பிளாசா, சிக்ஸ் பேட்டரி ரோடு ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் அலங்காரங்களை அனைவரும் ரசித்து புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளலாம்.
சிட்டி ஸ்குவேர் மால்
சிட்டி ஸ்குவேர் மாலில் 400க்கும் மேற்பட்ட மறுபயனீடு செய்யப்பட்ட புட்டிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரத்தை டிசம்பர் 29ஆம் தேதிவரை கண்டு இன்புறலாம்.