கிறிஸ்துமஸ் தாத்தாவின் உடையை அணிந்திருக்கும். ஆனால் தோற்றத்தில் அது பச்சையாகவும் சற்று விகாரமாகவும் இருக்கும்.
‘டாக்டர் சியுஸ்’ புத்தகங்களில் உள்ள கிரிஞ்ச் கதாபாத்திரமாக வேடமிட்ட ஒருவர், சண்டா கிளாஸ் வேடம் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்த பலருடன் இணைந்தார்.
பாபானெயெலாடா மொட்டேரா என்ற அந்நிகழ்ச்சி, ஸ்பெயினிலுள்ள பார்சிலோனா நகரில் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 2,000 பேர் பங்கேற்றனர்.
பிள்ளைகளுக்கான நிதித்திரட்டு நிகழ்ச்சிக்காக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
‘கிரிஞ்ச்’ என்ற கதாபாத்திரத்திற்கு கிறிஸ்துமஸ் பிடிக்காது என்றாலும் அதையும் சேர்த்துக்கொண்டது இந்நிகழ்ச்சி.
கிறிஸ்துமஸ் எல்லோர்க்குமானது என்பதை இது பிரதிபலிக்கிறது. இயேசு கிறிஸ்து பிறந்த நன்னாளாகக் கொண்டாடப்படுவதுடன் புனைவு கதாபாத்திரங்கள் வழி நல்லறத்தை போதிக்கும் பொன்னாளாகவும் கிறிஸ்துமஸ் திகழ்ந்து வருகிறது.

