ஆகஸ்ட் மாதக் கவிமாலைச் சந்திப்பில் சிங்கப்பூர் இலக்கியப் பரிசு 2024 இறுதிச் சுற்றுக்குத் தேர்வான கவிதை நூல்களைப் பற்றி கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வு சனிக்கிழமை ஆகஸ்ட் 31 மாலை 6 மணிக்கு தேசிய நூலகத்தில் 16வது தளத்தில் உள்ள ‘தி பாட்’ அறையில் நடைபெறவுள்ளது.
கவிமாலையின் விதைகள் மாணவரணியினர், சிங்கப்பூர் இலக்கியப் பரிசுக்குத் தேர்வான நூல்களிலிருந்து கவிதைகள் வாசிக்கின்றனர்.
கவிதை நூல்களைப் பற்றி எழுத்தாளர் எம்.சேகர், செ.வாசுதேவன் இருவரும் நூல்கள் பற்றிய கருத்துரைகளைப் பகிர்வதோடு, கவிஞர்களுடனான கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது. நித்யஸ்ரீ நிகழ்ச்சியை வழிநடத்துகிறார்.
‘படித்ததில் பிடித்த, ரசித்த கவிதை பகிர்தல்’அங்கத்தில், அண்மையில் நடந்த சிங்கப்பூர் தேசிய தினக் கொண்டாட்டத்தையொட்டி சிங்கப்பூர் சார்ந்த கவிதைகளை வாசிக்கும் நிகழ்வு இடம்பெறவிருக்கிறது.
இம்மாதப் போட்டிக்கு வந்த ‘விட்டு விடுதலையாகி‘ என்ற தலைப்பிலான கவிதைகள் குறித்த விமர்சனம், கவிதை வாசித்தல், கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு அங்கமும் உண்டு.
இந்த நிகழ்வுக்கு அனுமதி இலவசம். தொடர்புக்கு 9060 4464.