தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சருமப் பொலிவைக் கூட்டும் ஃபேஷியல்

2 mins read
1c8944e0-98da-4534-82c1-a9029cde000d
சருமப் பொலிவைக் கூட்டும் ஃபேஷியல் - படம்: ஒஏசியா ஸ்பா

சரும அழகை மெருகூட்ட பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் ‘ஃபேஷியல்’ எனப்படும் முகப் பராமரிப்பு செய்துகொள்வது வழக்கமாகிவிட்டது.

மென்மையான சருமம், அதிகப் பொலிவு, சருமத்திற்குத் தேவையான ஈரப்பதம் கிடைக்க வேண்டும் போன்ற காரணங்களுக்காக பலர் ஃபேஷியல் செய்துகொள்ள விரும்புகின்றனர்.

ஃபேஷியல் செய்த பிறகு சில நாள்களுக்கு சருமத்தின் பொலிவு அப்படியே இருக்கும். ஆனால், அந்தப் பொலிவு அதிக காலம் நீடித்திருக்க ஒருவர் அடிக்கடி ஃபேஷியல் செய்துகொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டு மாதத்திற்குப் பலமுறை சரும அலங்கார நிலையங்களை நாடுகின்றனர்.

அடிக்கடி ஃபேஷியல் செய்துகொள்வது சிறந்த தேர்வா என்பது குறித்து தோல் நிபுணர்கள் அவர்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். ஃபேஷியலில் பலவகை உண்டு. சாதாரணமாக ஃபேஷியலின்போது சருமம் ஆழமாக சுத்தம் செய்யப்படும். சருமத்திற்குள் அடைந்திருக்கும் தேவையற்ற அழுக்குகளும் அகற்றப்படும்.

ஃபேஷியல் செய்யப்படும்போது ஒருவரின் சருமம் நன்கு அழுத்தப்படும். அது சீரான ரத்த ஓட்டத்திற்கு வழியமைக்கும். முகப் பராமரிப்புக்கு அப்பாற்பட்டு, ஃபேஷியல் செய்துகொள்ளும்போது ஒருவருக்கு மனவுளைச்சலும் குறையும் என நம்பப்படுகிறது.

நியூயார்க் நகர், மவுண்ட் சினாயில் உள்ள இகான் மருத்துவப் பள்ளியில் தோல் மருத்துவத் துறையின் உதவிப் பேராசிரியர் டாக்டர் ஹெலன் ஹெ, அடிக்கடி ஃபேஷியல் செய்துகொள்வதன் மூலம் ஆரோக்கியமான சருமம் உற்பத்தி ஆகும் என்றார்.

ஆனால் இது எல்லோருக்கும் பொருந்தாது. தோல் தொய்வு அல்லது தோல் சுருக்கங்கள் உள்ளவர்கள் அடிக்கடி ஃபேஷியல் செய்யக் கூடாது. ஃபேஷியல் மூலம் கிடைக்கும் முழுப் பயன்கள் இத்தகைய சருமம் கொண்டவர்களுக்குக் கிடைக்காது.

அதுபோல, சருமத்தில் காயங்கள் உள்ளவர்கள் அல்லது தொற்று உள்ளவர்கள் ஃபேஷியல் செய்தால் சருமம் மோசமாகும். முகப் பராமரிப்பில் கவனம் எடுத்துக்கொள்பவர்களும் அடிக்கடி ஃபேஷியல் செய்துகொள்ளத் தேவையில்லை என்கின்றனர் தோல் நிபுணர்கள்.

ஒருவர் ஃபேஷியல் செய்ய முடிவு செய்வதற்கு முன்னர் அவரது சருமத்திற்கு எத்தகைய ஃபேஷியல் தேவை என்பதை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். நீரேற்றம் அளிக்கும் ஃபேஷியல் சருமத்திற்கு நன்கு பொலிவூட்டினாலும் ஏற்கெனவே ஈரப்பதம் கொண்ட சருமம் உடையவர்களுக்கு அது உகந்ததன்று.

மேலும், ஃபேஷியல் செய்துகொள்ள பெரும்பாலான நேரங்களில் அதிகச் செலவாகும். விலை மலிவான ஃபேஷியலை நாடுவதும் சரியான தேர்வன்று.

சிலர் வீட்டு அடிப்படையிலான முறையில் ஃபேஷியல் சேவைகளை நடத்தி வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் ஆயுர்வேத மூலப்பொருள்களைப் பயன்படுத்தி ஃபேஷியல் செய்வதாக நம்பப்படுகிறது. ஆனால், அது எந்த அளவுக்கு நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதை நன்கு ஆராய்ந்த பின்னரே அதற்குச் செல்ல வேண்டும்.

குறிப்புச் சொற்கள்