மஸ்ஜித் ஜாமியா சூலியா, சிங்கப்பூர் நாகூர் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த நோன்புத் துறப்பு நிகழ்ச்சியில் ஏறத்தாழ 1100 பேர் பங்கேற்றனர்.
கடந்த மார்ச் 23ஆம் தேதியன்று ஜாமியா சூலியா பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சட்ட, போக்குவரத்து துணையமைச்சர் முரளி பிள்ளை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
அவர், முகமது நபிகளின் வார்த்தைகளைக் குறிப்பிட்டுப் பேசியதுடன் நோன்பின் மாண்பு, உதவி மனப்பான்மை ஆகியவை குறித்தும் பேசினார் .
அமைச்சர் முரளி பிள்ளைக்கு முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்பு நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நாகூர் சங்கம், ஜாமியா சூலியா பள்ளிவாசல் ஆகியவற்றின் நிர்வாகத்தினர், உறுப்பினர்கள், பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் திரளாகப் பங்கேற்றனர்.
தொடர்ந்து சமூக நல்லிணக்க பிரார்த்தனையுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.

