தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வீட்டிற்குத் தனித்தன்மை சேர்க்கும் சிறப்புச் சுவர்கள்

2 mins read
d51377f0-f564-4680-8bfb-843abda3de19
வீட்டின் அறையில் வடிவமைக்கப்பட்ட சிறப்பு அம்‌சச் சுவர்கள். - படம்: இணையம் 

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்பது பலர் அறிந்த பழமொழி. நம் வீட்டில் உள்ள சுவர்களையே சித்திரம்போல அழகாக வடிவமைக்கலாம் என்கிறார்கள் வீட்டு மறுசீரமைப்பு நிபுணர்கள். 

சிறிதளவு வண்ணச்சாயம், வசிப்போரின் விருப்பத்திற்கேற்ப செய்யப்படும் தச்சு வேலை போன்றவை சாதாரண சுவர் ஒன்றைச் சிறப்பு அம்சம் கொண்ட சுவராக மாற்றக்கூடும். 

வீடுகளைப் புதுப்பிக்க நினைப்பவர்கள், தங்கள் முழுவீட்டையும் புதுப்பித்து வீட்டில் உள்ள அனைத்துப் பொருள்களையும் மாற்றத் தேவையில்லை. அவர்கள் ஒரு சுவரை மட்டும் மாற்றி அமைத்தால் போதும். 

‘ஃபீச்சர் வால்ஸ்’ எனப்படும் சிறப்பம்சச் சுவர்கள் ஒரு அறைக்குத் தனித்தன்மையையும், ஆழத்தையும் பார்வை ஈர்ப்பையும் சேர்க்கும் ஒரு பிரபலமான வழிமுறையாகும்.

‘ஃபேஸ்லிஃப்ட் டிசைன் இண்டீரியர்ஸ்’  எனும் மறுசீரமைப்பு வடிவமைப்பு நிறுவனத்தைச் சேர்ந்த திருமதி அமிலியா கனியின் கூற்றுப்படி, கண்ணைக் கவரும் வண்ணங்கள், நெசவு நயம் உள்ளிட்டவற்றின்வழி, சிறப்பம்சச் சுவர்கள் மற்ற சுவர்களிடமிருந்து மாறுபட்டுத் திகழவேண்டும்.

‘கிளோரியஸ் ஸ்டேட்’ எனும் மறுசீரமைப்பு வடிவமைப்பு நிறுவனத்தைச் சேர்ந்த திருமதி பெரிண்டா சோ, வடிவமைப்பாளர்கள் பெரும்பாலும் சிறப்பம்சச் சுவர்களைச் சொகுசு நாற்காலிகள் அல்லது கட்டில்கள் போன்ற முக்கிய அறைகலன்களுக்குப் பின்னால் அமைக்கிறார்கள். அறைக்குள் நுழைவோரை வரவேற்கும் உணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பம்சச் சுவர்களைப் பார்வைக்குத் தெரியும்படி அமைக்கிறார்கள்.

சிறப்பம்சச் சுவர்களுக்கான தெரிவுகள் பல உள்ளன. அவற்றுள், வண்ணச்சாயம், சுவரொட்டிகள், பளிச்செனக் காணப்படும் பலகைகள், உள்ளமைக்கப்பட்ட சுவரோவியங்கள், இயற்கைக் கல், ஓடுகள் போன்ற வழக்கத்திற்கு மாறான பொருள்கள் இந்தக் கலைக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

வண்ணச்சாயம் மலிவாகவும் பொதுவாக நாமாகவே சுயமாகச்  செய்யக்கூடியதாகவும் இருக்கும். லைம்வா‌ஷ் எனப்படும் சுண்ணாம்புப் பூ‌ச்சு, கலர் வாஷிங் போன்ற நுட்பங்கள் வடிவமைப்பு உடைய, மென்மையான, நீர்ச்சாயம் போன்ற தோற்றத்தை வழங்குகின்றன.

இயற்கைச் சுண்ணாம்பு மற்றும் நீரினால் செய்யப்படும் லைம்வாஷ், சூழலுக்கு உகந்தது ,

குறைந்த ஆவியாகும் கரிமச் சேர்மங்கள் கொண்டது, பூச்சிகளைத் தடுக்கவும் செய்யும். ஆனால், சிறந்த முடிவுகளுக்குச் சரியான சுவர் தயாரிப்பும் நுட்பமும் தேவை.

குறிப்புச் சொற்கள்