கடந்த சில நாள்களாக சமூக ஊடகங்களில் செயற்கை நுண்ணறிவால் தயாரிக்கப்பட்ட ஜிபிலி (Ghibli) படங்களை அதிகமாகப் பார்க்க முடிகிறது.
இதனால் இணையவாசிகள் பலர் தங்களது படங்களை ChatGP உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு தளங்களில் பதிவேற்றம் செய்து ஜிபிலி படங்களைத் தயாரித்து வருகின்றனர்.
இணையவாசிகள் மட்டுமின்றி வர்த்தக நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலதரப்பு மக்களும் தங்களது ஜிபிலி படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
முதலில் குறிப்பிட்ட சில பயனீட்டாளர்களால் மட்டுமே ChatGP மூலம் ஜிபிலி படங்களைத் தயாரிக்க முடிந்தது. தற்போது பெரும்பாலானவர்களால் அதை இலவசமாகச் செய்யும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.
ChatGP மூலம் ஜிபிலி படங்களைத் தயாரிக்கும் வழிகள்:
முதலில் ChatGPT இணையத் தளம் அல்லது செயலிக்குச் செல்லவும்
திரையின் கீழே இடது பக்கத்தில் ‘+’ குறியீடு இருக்கும். அதைத் தட்டி நமது படத்தைப் பதிவேற்றம் செய்யவும்.
படத்திற்கு மேல் ‘Ghiblify this’ அல்லது ‘turn this image in Studio Ghibli theme’ என்று தட்டச்சு செய்யவும்.
உங்களுடைய ஜிபிலி படத்தைச் செயற்கை நுண்ணறிவு தயாரித்துவிடும். அதை இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம்.