தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பரிசளிக்கும் பறவைகள், மோசடி செய்யும் பூச்சிகள்

3 mins read
973b9f38-f6dc-4e25-958c-b358d46e2174
மனிதர்களின் திருமணச் சடங்குகள்போல, பறவைகள், பூச்சியினங்களில் இணை ஈர்ப்புச் சடங்குகள் நடைபெறுகின்றன. - படம்: Orangepet இணையப்பக்கம்

அன்பின் அடையாளமாக மனத்துக்கு நெருக்கமானவர்களுக்குப் பரிசளித்து மகிழ்வது மனிதர்களின் இயல்பு. இனிப்பு, பூங்கொத்து, அழகான பொருள்கள் என நாம் பரிசளிப்பது போன்றே, பிற உயிரினங்களும் தங்கள் இணையை ஈர்க்கவும் மகிழ்விக்கவும், குறிப்பிட்ட சில பொருள்களைப் பரிசளிக்கின்றன.

இவற்றில் ஆண் இனம், பொதுவாக இனச்சேர்க்கையின்போது காதலை வெளிப்படுத்த இவ்வாறு பரிசளிப்பது கண்டறி[Ϟ]யப்பட்டுள்ளது. இவற்றைத் ‘திருமணப் பரிசு’ (Nuptial Gifts) என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

பறவைகள், விலங்குகள், பூச்சிகள் எனப் பல வகை உயிரினங்களிடம் இந்தப் பழக்கம் இருப்பதை விலங்கியல் வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்.

பரிசளிக்கும் பறவைகள்

தோட்டப்பறவைகள் என்றழைக்கப்படும் பௌவர்ட் பறவைகள், தங்கள் இணையை மகிழ்விக்க, கூடு உருவாக்கி, அதனை வண்ண மலர்கள், ‘பெர்ரி’ வகைப் பழங்கள், பளபளக்கும் பொருள்கள் போன்றவற்றைக் கொண்டு அலங்கரிக்கின்றன.

மீன்கொத்திப் பறவைகள், சிறந்த மீனைத் தேர்ந்தெடுத்து தங்களது இணைக்குப் பரிசளிக்கின்றன.

அண்டரண்டப் பறவை என்னும் ‘அல்பட்ரோஸ்’, தனது இணையுடன் அழகாக நடனமாடி ஈர்க்க முயலும்.

காகங்கள் கண்களைப் பறிக்கும் பொருள்களையும் அவற்றின் இணைகளுக்கு விருப்பமான உணவு வகைகளையும் பரிசாக வழங்குகின்றன.

பெங்குவின்கள் தங்கள் இணைக்கு, அழகிய வழுவழுப்பான கூழாங்கற்ளைத் தேடித் தேர்ந்தெடுத்துப் பரிசளிக்கின்றன.

டால்ஃபின்களும் பசுக்களும் தங்களுக்கு உதவும் மனிதர்களுக்கு, நன்றியின் வெளிப்பாடாகப் பரிசுகள் வழங்குவ[Ϟ]துண்டு என வல்லுநர்கள் தெரிவித்தனர்.

மனிதக் குரங்குகள், தங்கள் கூட்டத்தைச் சாராத குரங்குகளுடன் நட்பு ஏற்படுத்திக்[Ϟ]கொள்ள வாழைப்பழங்களைப் பரிசளிக்கின்றன.

நத்தை, மண்புழுக்கள், கணவாய் உள்ளிட்டவை தங்கள் இணைக்குச் சத்தான உணவுத் துண்டுகளைத் தேர்ந்தெடுத்து வழங்குகின்றன.

‘மெகோப்டெரா’ எனும் பூச்சியினம் இணைக்கு எச்சிலைப் பரிசாக அளிக்கின்றது.

மோசடி செய்யும் பூச்சிகள்

இனச்சேர்க்கைக் காலங்களில் இணையை ஈர்க்க, சில உயிரி[Ϟ]னங்கள் ஏமாற்று வேலைகளிலும் ஈடுபடுகின்றன.

‘நர்சரி வெப் ஸ்பைடர்’ எனப்படும் சிலந்திகள் சிறு பூச்சிகளை இரையாகத் தேர்ந்தெடுத்து, அதைத் தன் உடலிலிருந்து சுரக்கும் பட்டு போன்ற பொருளுடன் சில வேதிப்பொருள்களையும் சேர்த்துச் சுற்றிப் பரிசளிக்கின்றன.

இணை அதனால் மகிழாவிட்டால், அதே இரையின் மீது கூடுதலாக, பட்டு போன்ற பொருளை சுற்றிப் பரிசாகக் கொடுக்கின்றன.

சில நேரங்களில், தரம் குறை[Ϟ]வான, பாதி உண்ட இரையைக்கூட வேதிப்பொருள் கலந்து கொடுத்து ஏமாற்றுகின்றன.

பெண் சிலந்தி உள்ளிருக்கும் இரையை எடுப்பதில் முனைந்திருக்கையில், கணப்பொழுதில் அவற்றுடன் இணை சேர்ந்துவிட்டு ஆண் சிலந்திகள் ஓடிவிடுகின்றன.

ஆண் ‘நர்சரி வெப்’ சிலந்திகள் கொடுக்கும் பரிசுகளில் 70 விழுக்காடு போலியானவை என்று ஓர் ஆய்வு கண்டறிந்துள்ளது.

பெண் சிலந்திகள் போலிப் பரிசுகளைக் கண்டறிந்தால் அந்த ஆண் சிலந்திகளை நிராகரித்துவிடுகின்றன. இதனால் அச்சிலந்திகளுக்கு நீண்டகாலத் துணை கிடைப்பதில்லை.

இவ்வாறு ஏமாற்றும் சிலந்திகள் ஒருபுறமிருக்க, சில பூச்சிகள் தங்களது இணைக்காகப் பெருந்தியாகங்களையும் செய்கின்றன.

‘சேஜ்பிர‌ஷ் கிரிக்கட்’ எனும் வெட்டுக்கிளி வகைப் பூச்சி இனச்சேர்க்கையின்போது தனது பின்புற இறகுகளைக் கடித்து ரத்தம் உறிஞ்சிக் கொள்ள இணையை அனுமதிக்கின்றது.

இந்தக் ‘காதல் கடி’ பெற்றபின் அவற்றால் மற்றொரு துணையைத் தேட முடியாது என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இணைக்காக இவை இத்தியாகத்தைச் செய்கின்றன.

‘ரெட் பேக் ஸ்பைடர்ஸ்’ எனும் சிலந்திகள் இனச்சேர்க்கையின் போது குட்டிக் கரணம் அடித்துப்பின் பெண் சிலந்தியின் வாயில் சிக்கிக்கொள்கின்றன. பெண் சிலந்தி மெல்ல மெல்லத் தன்னை உண்ண, ஆண் சிலந்தி அனுமதிக்கிறது.

இதிலும் சில சிலந்திகள் தப்பிக்கும் எண்ணத்துடன் முழுமையாக வளர்ச்சியடையாத பெண் சிலந்திகளைத் தங்கள் இணையாகத் தேர்ந்தெடுப்பதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்