சிங்கப்பூரில் இசைமழை பொழியவிருக்கும் ஹரிஷ் ராகவேந்திரா

சிங்கப்பூரில் இசைமழை பொழியவிருக்கும் ஹரிஷ் ராகவேந்திரா

2 mins read
9c292ac4-f945-46f5-bf8a-71e4a1fdcd5f
‘வாய்ஸ் ஆஃப் மெலோடி’ நிகழ்ச்சியில் பின்னணிப் பாடகர் ஹரிஷ் ராகவேந்திராவுடன் உள்ளூர், வெளிநாட்டுப் பாடகர்கள் பலரும் பாடவுள்ளனர். - படம்: மாஸ்க் ஸ்டூடியோஸ்

‘நெஞ்சைப் பூப்போல்’, ‘முதற் கனவே’ உள்ளிட்ட பல புகழ்பெற்ற திரைப்படப் பாடல்களைப் பாடிய பின்னணிப் பாடகர் ஹரிஷ் ராகவேந்திராவின் இசை நிகழ்ச்சி முதல்முறையாக சிங்கப்பூரில் மே ஒன்பதாம் தேதி நடக்கவுள்ளது.

சிங்கப்பூருக்கு வருகைதரும் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர் ஹரிஷ் ராகவேந்திரா.
சிங்கப்பூருக்கு வருகைதரும் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர் ஹரிஷ் ராகவேந்திரா. - படம்: தமிழ் முரசு

சிங்கப்பூர்க் கலைப் பள்ளி கச்சேரி மண்டபத்தில் மாலை 6.30 மணி முதல் நடக்கவிருக்கும் ‘வாய்ஸ் ஆஃப் மெலோடி’ நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது மாஸ்க் ஸ்டூடியோஸ்.

நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகள் 80 விழுக்காடு விற்றுவிட்ட நிலையில், எஞ்சியவையும் விரைவில் விற்றுத் தீரலாம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகளைப் பெற எஸ்ஜி கலாசார சிறப்புத்தொகையைப் பயன்படுத்தலாம்.

2025ஆம் ஆண்டு, ‘ராஜா ரிட்டர்ன்ஸ்’ என்ற இளையராஜா இசை நிகழ்ச்சி, 2024ஆம் ஆண்டு உன்னி மேனனின் இசை நிகழ்ச்சி போன்றவற்றோடு பல்வேறு நகைச்சுவை நிகழ்ச்சிகளையும் இதற்கு முன்பு மாஸ்க் ஸ்டூடியோஸ் நடத்தியிருக்கிறது.

இவ்வாண்டின் நிகழ்ச்சியில் ஹரிஷ் ராகவேந்திராவுடன் சூப்பர் சிங்கர் புகழ் ஆப்ரஹாம் நித்ய பாண்டியன், சரிகமபா லிட்டில் சேம்ப்ஸ் புகழ் ஹேமித்ரா ரவிச்சந்திரன், பின்னணிப் பாடகர் சரண்யா ஸ்ரீனிவாஸ், உலக சாதனை படைத்த பூஜா பிரேம் ஆகியோரும் இணைந்து பாடவுள்ளனர்.

மேலும், பின்னணிப் பாடகர் பரசு கல்யாண், மாஸ்க் ஸ்டூடியோஸ் சிங்கப்பூரில் ஏற்பாடு செய்யும் அல்டிமேட் சிங்கர் போட்டி புகழ் சுஹாஸ், திரிபுரசுந்தரி, சம்ரிதி, வசந்தம் ஸ்டார் புகழ் சுவாமிநாதன், சிந்து ஆகியோரும் நிகழ்ச்சியில் பாடவுள்ளனர்.

உள்ளூர் நட்சத்திரம் விஷ்ணு ஆனந்த் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளார்.

மெல்லிசைப் பாடல் பிரியர்களுக்கு இந்நிகழ்ச்சி சிறந்த அனுபவமாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது. 

அணை, தாஜ் மஹால் உணவுகள், ஜி ஸ்டார் இன்ஜினியரிங் லிமிடெட், சீதா ஸ்டூடியோஸ், பிரேம் ஸ்டார்ஸ் தயாரிப்பு நிறுவனம், ‘பாடும் நிலா’ எஸ் பி பாலசுப்ரமணியத்துடன் 78 இசை நிகழ்ச்சிகளில் பணிபுரிந்த மௌன ராகம் இசைக்குழு ஆகிய அமைப்புகளும் மாஸ்க் ஸ்டூடியோசுடன் இணைந்து இந்நிகழ்ச்சியைப் படைக்கின்றன. 

சிறப்பு நுழைவுச்சீட்டுகளை வாங்குவோருக்கு நிகழ்ச்சிக்கு ஒரு நாளுக்கு முன்பு அனைத்துப் பாடகர்களையும் சந்திக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.

நுழைவுச்சீட்டுக் கட்டணம் 40 வெள்ளியிலிருந்து தொடங்குகிறது.

https://bookmyshow.sg/en/e/VOICEOFH என்ற இணையப்பக்கம் வழியாக நுழைவுச்சீட்டுகளை வாங்கலாம்.

குறிப்புச் சொற்கள்