பல்வேறு சமூகங்களை ஒன்றிணைத்த நோன்பு துறப்பு

பல்வேறு சமூகங்களை ஒன்றிணைத்த நோன்பு துறப்பு

1 mins read
81316be8-0195-403b-966f-acc4621566d9
சிறப்பு விருந்தினரான கல்வி, தேசிய வளர்ச்சி அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் சையது ஹாருன் அல்ஹப்ஷியுடன் (நடுவில்) நிகழ்ச்சியில் பங்கேற்ற விருந்தினர்கள். ஸ்ரீ நாராயண மிஷன் தலைமை நிர்வாக அதிகாரி எஸ் தேவேந்திரன், வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் நசீர் கனி, ஜோதி ஸ்டோர் & புஷ்பக்கடை உரிமையாளர் ராஜ்குமார் சந்திரா ஆகியோர் உள்ளனர்.  - படம்: ஏற்பாட்டுக் குழு

சிங்கப்பூரில் சமய நல்லிணக்கம், சமூக ஒற்றுமை, ஒருவர்மீது ஒருவர் கொண்டுள்ள மரியாதை போன்ற பண்புநெறிகளை வலுப்படுத்தும் நோக்கில் ஸ்ரீ நாராயண மிஷன், ராயல் கிங்ஸ் குழுமத்தின் ஆதரவுடன் இஃப்தார்@எஸ்என்எம் எனும் சிறப்பு நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சி மார்ச் 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரை, எஸ்என்எம் நர்சிங் ஹோம்@ரிவர்வாக், 2 ஈசூன் லேனில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கல்வி, தேசிய வளர்ச்சி அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் சையது ஹாருன் அல்ஹப்ஷி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார். சிங்கப்பூரின் சமூக ஒற்றுமை, சமய நல்லிணக்கம், பல்வேறு கலாசாரங்கள் இணைந்து வாழும் தேசிய விழுமியங்கள் குறித்து அவர் தமது உரையில் வலியுறுத்தினார்.

சிங்கப்பூரின் பல்வேறு சமயத் தலைவர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழிலதிபர்கள், பல சமூகங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினர். இது சிங்கப்பூரின் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற தேசிய அடையாளத்தை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியாக அமைந்தது.

குறிப்புச் சொற்கள்