டிஎம்ஒய் ஜூவல்லர்ஸ் திறப்பு விழா

1 mins read
cb879ba9-94ae-42c0-9449-bbb56de191f7
டிஎம்ஒய் ஜூவல்லர்ஸின் புதிய நகைத் தொகுப்பு. - படம்: செய்யது இப்ராகிம்; செய்தி: விஷ்ருதா நந்தகுமார்

புதிதாக விரிவடைந்துள்ள எண் 113 சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள டிஎம்ஒய் ஜூவல்லர்ஸ் (DMY Jewellers) கடையின் திறப்பு விழா ஏப்ரல் 25-ஆம் தேதி நடந்தேறியது.

திருமணத்திற்குத் தயாராகும் மணப்பெண்களுக்கு ஏற்ற வகையில் நகை தொகுப்பு, நவீன காலத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட பழங்கால நகைகளைக் கொண்ட நகை தொகுப்பு (antique collection) எனப் பல வடிவங்களில் புதிய ஆபரண தொகுப்புகளை டிஎம்ஒய் ஜூவல்லர்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

தங்கள் வாடிக்கையாளர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு இவ்விரிவாக்கத்தைச் செய்துள்ளதாகக் கடையின் உரிமையாளர் திரு. டத்தோ முகமது யூசோப் தெரிவித்தார்.

“திருமணத்திற்கு நகை வாங்க வரும் குடும்பங்களுக்கென்று தனி அறையை ஒதுக்கியுள்ளோம். வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுப்பதே எங்கள் நோக்கம்” என்றார் அவர்.

மேலும், தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருப்பதால் இளையர்கள் உட்பட பல சிங்கப்பூரர்கள் நகை வாங்குவதைச் சேமிப்பாகக் கருதி அதில் அதிக ஈடுபாடு காட்டுவதாகவும் அவர் கூறினார். அவர்களின் விருப்பு வெறுப்புகளையும் கருத்தில் கொண்டு, இளையர்களை ஈர்க்கும் வகையில் சிறிய நகைகளும் விற்பனைக்கு வந்துள்ளன.

வாடிக்கையாளர்கள் தொடர்ந்து கொடுத்து வரும் நல்லாதரவுக்கு நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்