செந்தோசாத் தீவு முழுதும் சுவாரசியமான நடவடிக்கைகள்

2 mins read
b3d4a08a-b310-466d-89e6-41f4a1de37d3
கடற்கரை ஓரத்தில் பல நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு மக்கள் நேரத்தைக் கழிக்கலாம். - படம்: செந்தோசா மேம்பாட்டுக் கழகம்

இரவு வானில் மின்னும் விண்மீன்களோடு வெட்டவெளியில் திரைப்படங்களைப் பார்த்தல், தங்க நிறத்தில் சூரியன் மறையும் காட்சியை ரசித்தல், பெரனாக்கன் பாரம்பரியத்தைக் கண்டறிதல் என மக்கள் ஜூன் மாதம் முழுதும் செந்தோசாத் தீவில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

செந்தோசாவில் சூரியன் மறைவதைக் கண்டுகளித்தல் (Sentosa Sunset Watch Party)

நிதானமாகவும் மெதுவாகவும் செயல்படும் கலையைக் கொண்டாடும் விதமாக ஒவ்வொரு வாரமும் சூரியன், மணல், கடல் என இயற்கையோடு இணையும் ஒரு வாய்ப்பாக இவ்விழா விளங்குகிறது.

அன்றாட வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, ‘இன்டென்ஷனல் லிவிங்’ (intentional living) என்றழைக்கப்படும் வாழ்க்கைமுறையைப் பின்பற்ற இவ்விழாவின் நிகழ்ச்சிகள் ஊக்குவிக்கின்றன.

பாடும் பளிங்குக் கிண்ணங்கள் (Crystal Singing Bowls) என்றழைக்கப்படும் இசைக்கருவிகளின் இசையில் மூழ்கியவாறே சூரியன் மறையும் எழிலைக் கண்டு களிக்கலாம்.
பாடும் பளிங்குக் கிண்ணங்கள் (Crystal Singing Bowls) என்றழைக்கப்படும் இசைக்கருவிகளின் இசையில் மூழ்கியவாறே சூரியன் மறையும் எழிலைக் கண்டு களிக்கலாம். - படம்: செந்தோசாத்தீவு மேம்பாட்டு கூட்டுநிறுவனம்

இடம்: பலவான் கடற்கரைப் பாதை, செந்தோசா (எக்ஸ்ப்ளோரர்ஸ் ஆஃப் செந்தோசாவுக்கு (Explorers of Sentosa) அருகே)

தேதி: 13 ஜூன் முதல் 30 ஆகஸ்ட் வரை, வெள்ளிக்கிழமைகளும் சனிக்கிழமைகளும்

நேரம்: மாலை 6 மணி முதல் 8 மணிவரை

கட்டணம்: இலவசம், முன்பதிவு அவசியம்

கடற்கரை ஓரத்தில் திரைப்படங்கள்: குடும்ப விழா

செந்தோசாத் தீவில் திரைப்படம் பார்க்கும் மக்கள்.
செந்தோசாத் தீவில் திரைப்படம் பார்க்கும் மக்கள். - படம்: செந்தோசா மேம்பாட்டுக் கழகம்

குடும்பங்களுக்கு ஏற்றவாறு புகழ்பெற்ற கேலிச்சித்திரத் திரைப்படங்களைப் பார்த்தல், சாப்த்தே, ஐந்து கற்கள் போன்ற இலவச விளையாட்டு முகப்புகள் எனச் சுவையூட்டும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வருகையாளர்கள் இலவசமாகச் சோளப்பொரி (popcorn), பஞ்சு மிட்டாய் போன்ற சிற்றுண்டிகளைச் சுவைக்கலாம்.

வருகையாளர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் சிற்றுண்டிச் சாவடிகள்.
வருகையாளர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் சிற்றுண்டிச் சாவடிகள். - படம்: செந்தோசா மேம்பாட்டுக் கழகம்

இடம்: பலவான் சிறுவர்கள் நகர மேற்கூரைத் தோட்டம் (Palawan Kidz City Roof Garden), செந்தோசா

தேதி: 14 ஜூன் முதல் 29 ஜூன் வரை, சனிக்கிழமைகளும் ஞாயிற்றுக்கிழமைகளும்

நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 10 மணிவரை (சிற்றுண்டிச் சாவடிகள் மட்டும் மாலை 4.30 மணியிலிருந்து 7.30 மணிவரை)

கட்டணம்: இலவசம்

மறுவடிவமைக்கப்பட்ட பெரனாக்கன் பாரம்பரியம்

இரவில் மிளிரும் ‘த பெரனாக்கன் ஹவுஸ்’ (The Peranakan House).
இரவில் மிளிரும் ‘த பெரனாக்கன் ஹவுஸ்’ (The Peranakan House). - படம்: செந்தோசா மேம்பாட்டுக் கழகம்

துடிப்புமிக்க இந்த விழாவில் புத்துயிர் பெறும் விதமாக மறுவடிவமைக்கப்பட்டுள்ள பெரனாக்கன் பாரம்பரியம் ஒரு கண்காட்சியாக அமைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் 60ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியில், பெரனாக்கன் சமூகத்தின் கலைத்திறனைப் பார்த்து, கேட்டு, உணர முடியும்.

ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை, செந்தோசாத் தீவு முழுதும் பெரனாக்கன் பாரம்பரியத்தை மையப்படுத்தும் பயிலரங்குகள், பலதரப்பட்ட நிகழ்ச்சிகள், தனித்துவமான சிறப்பு உணவு அனுபவங்கள் எனப் பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேல்விவரங்களுக்கு செந்தோசாத் தீவின் இணையத்தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்