முன்னாள் கைதிகளுடன் நோன்பு துறப்பு

2 mins read
746980e8-1f88-4dc7-9193-d8e6cf9504e5
சிங்கப்பூர் கனிவன்பு இயக்கம், மாவர் சமூகச் சேவைகள் அமைப்பு, தென்கிழக்கு சமூக மேம்பாட்டு மன்றம் உள்ளிட்ட 20 அடித்தள அமைப்புகள் பங்காளிகளாக இணைந்தன.  - படம்: மாவர் சமூகச் சேவைகள் அமைப்பு

சிறைசென்று மறுவாழ்வு தேடுபவர்கள், சமூகத் தொண்டர்களுடன் நோன்பு துறக்கும் விருந்தில் கலந்துகொண்டு ஈகையுணர்வில் இணைந்தனர்.

பிரியாணி, இறைச்சி சூப்புடன் அவர்கள், பலதரப்பட்ட வாழ்க்கை அனுபவங்களை ஒருவரோடு ஒருவர் பகிர்ந்துகொண்டு, அறிவு முதிர்ச்சியை நோக்கிய தங்களது பயணத்தைப் பற்றி பங்கேற்பாளர்கள் கலந்துரையாடினர்.

‘ரோசஸ் ஆஃப் பீஸ்’ (Roses of Peace) சமய நல்லிணக்க அமைப்பின் ஏற்பாட்டில் இந்த ‘இஃப்தார்’ இரவு விருந்து வெள்ளிக்கிழமை (மார்ச் 7) மாவர் சமூகச் சேவைகள் அமைப்பின் வளாகத்தில் நடைபெற்றது.

சிங்கப்பூர் கனிவன்பு இயக்கம், மாவர் சமூகச் சேவைகள் அமைப்பு, தென்கிழக்கு சமூக மேம்பாட்டு மன்றம் உள்ளிட்ட 20 அறநோக்கு அமைப்புகள் பங்காளிகளாக இணைந்தன.

முன்னாள் குற்றவாளிகள் 30 பேர், ‘லயன்ஸ் பிஃபிரெண்டர்ஸ்’ அமைப்பைச் சேர்ந்த கிட்டத்தட்ட 40 பேர் உட்பட மொத்தம் 150க்கும் அதிகமானோர் கூடியிருந்தனர்.

‘சமூகத்தில் நல்லிணக்கத்தைத் தூண்டுவோம்’ என்ற கருப்பொருளுடன் நடந்தேறியது இந்நிகழ்ச்சி.

முன்னாள் குற்றவாளிகள் 30 பேர், ‘லயன்ஸ் பிஃபிரெண்டர்ஸ்’ அமைப்பைச் சேர்ந்த கிட்டத்தட்ட 40 பேர் உட்பட மொத்தம் 150க்கும் அதிகமானோர் கூடியிருந்தனர். 
முன்னாள் குற்றவாளிகள் 30 பேர், ‘லயன்ஸ் பிஃபிரெண்டர்ஸ்’ அமைப்பைச் சேர்ந்த கிட்டத்தட்ட 40 பேர் உட்பட மொத்தம் 150க்கும் அதிகமானோர் கூடியிருந்தனர்.  - படம்: மாவர் சமூகச் சேவைகள் அமைப்பு

தேசிய வளர்ச்சிக்கான மூத்த துணையமைச்சர் டான் கியட் ஹாவ், தென்கிழக்கு வட்டார மேயர் ஃபாஹ்மி அலிமான் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.

பல்வேறு பின்புலங்களைச் சேர்ந்தோரை இந்நிகழ்ச்சி ஒன்றுசேர்த்ததாக மாவர் சமூகச் சேவைகள் அமைப்பில் தொண்டூழியும் செய்யும் 24 வயது சோஃபியா சூன் கூறினார்.

“இத்தகைய நிகழ்ச்சிகளின் மூலம் முஸ்லிம்களின் பண்பாடு மற்றவர்களிடமும் சிறிதளவாவது சென்று சேர்கிறது. அத்துடன், முன்னாள் குற்றவாளிகளுக்கான மறுவாழ்வுத் திட்டங்கள் பற்றிய அறிமுகத்தையும் சிலர் இந்த நிகழ்ச்சியின்வழி பெற்றனர்,” என்றார் குமார் சோஃபியா.

இந்நிகழ்ச்சி போன்று 2017ல் சிங்கப்பூர் கனிவன்பு இயக்கமும் (Singapore Kindness Movement) ரோசஸ் ஆஃப் பீஸ் அமைப்பும் கூட்டாகச் செயல்பட்டு ‘கனிவன்பு இஃப்தார்’ நிகழ்ச்சி நடத்தப்பட்டதை ‘ரோசஸ் ஆப் பீஸ்’ நிறுவனர் முஹம்மது இர்ஷாத் குறிப்பிட்டார்.

“கொவிட்-19 காலகட்டம் தவிர்த்து, இத்தகைய முயற்சிகளை ஆண்டுதோறும் செய்து வருகிறோம். வயதானவர்கள், வசதி குறைந்தோர், வெளிநாட்டு ஊழியர்கள் எனக் கவனமும் கனிவன்பும் தேவைப்படும் அனைவரையும் இத்தகைய நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்துகிறோம். அத்தகைய நிகழ்ச்சிகளில் மூத்தோருடன் இளையர்களும் கலந்துகொள்வதைக் காண முடிவது பெருமகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார் திரு இர்ஷாத்.

குறிப்புச் சொற்கள்