சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் 138ஆவது கதைக்களம் நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர்) மாலை 4 மணிக்கு தேசிய நூலகத்தின் ஐந்தாம் தளத்திலுள்ள ‘இமேஜினேஷன்’ அறையில் நடைபெறவிருக்கிறது.
நிகழ்ச்சியில் ஷாநவாஸ் எழுதிய ‘ஒலி மூங்கில்’ சிறுகதைத் தொகுப்பு பற்றிய கலந்துரையாடல் இடம்பெறும்.
அங்கோர் வாட்டில் நடைபெற்ற ‘கடாரம் கொண்டான்’ மாநாடு, சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ஏற்பாட்டில் கம்போடியப் பயணம் பற்றிய அனுபவப் பகிர்வும் இடம்பெறும்.
மேலும், கதைக்களத்திற்கு வந்துசேர்ந்த போட்டிப் படைப்புகளைப் பற்றிய கலந்துரையாடலும் வெற்றியாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்படும்.
ஜனவரி மாதப் போட்டிகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுவிட்டன. அதுகுறித்த மேல்விரங்களுக்கு: https://www.singaporetamilwriters.com/16.
தொடர்புக்கு: மணிமாலா மதியழகன் - 8725 8701, பிரேமா மகாலிங்கம் - 9169 6996

