சிங்கப்பூரில் இருக்கும் கவிஞர்களும், கவிதை ஆர்வலர்களுடனும் கவிமாலை அமைப்பு ஒவ்வோர் மாதமும் கடைசி சனிக்கிழமையன்று மாதாந்திர சந்திப்பை நடத்தி வருகிறது.
கவிமாலையின் இந்த மாத சந்திப்பு நிகழ்ச்சி இன்று மாலை (27 டிசம்பர்) ஆறு மணிக்கு தேசிய நூலகத்தில் ‘பப்ளிசிட்டி’ அறையில் நடைபெறுகிறது.
எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜின் ‘நவீனக் கவிதை - சொல்லும் படிமங்களும்: இன்றைய பரிமாணங்கள்’ எனும் தலைப்பில் சிறப்புரை இடம்பெறவிருக்கிறது.
அதில் கவிதையும், காரணமும் அங்கம் இடம்பெறும். மேலும், கவிஞர் அஷ்ரபின் நூல் அறிமுக அங்கமும், தங்கமுனை விருதுபெற்ற கவிதைகள் வாசிப்பு அங்கமும் இடம்பெறவிருக்கிறது.
கவிஞர் பிரம்மகுமார் வழிநடத்தவிருக்கும் சந்திப்பு நிகழ்ச்சியில் கவிதை வாசித்தல், பரிசளிப்பு அம்சங்களும் இடம்பெறும். நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.

