இஸ்கந்தர் புத்திரி: சீனப் புத்தாண்டுக் காலத்தில், பாரம்பரியமும் கற்பனைத்திறனும் இணையும் ஒரு புதிய உலகிற்குக் குடும்பங்களை வரவேற்கிறது லெகோலேண்ட் மலேசியா ரிசார்ட்.
2026 ஜனவரி 22 முதல் பிப்ரவரி 22 வரை ஒருமாத காலத்திற்கு ‘குதிரை ஆண்டு’ கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெறவுள்ளன.
‘செழுமையின் தோட்டம்’ எனும் கருப்பொருளில் இந்தப் பொழுதுபோக்குப் பூங்கா, தற்போது சிவப்பு விளக்குகள், செர்ரி பூக்கள் மற்றும் கண்கவர் லெகோ படைப்புகளுடன் ஒரு துடிப்பான திருவிழாக் களமாக மாறியுள்ளது.
இந்தக் கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாக, 2.4 மீட்டர் உயரமுள்ள பிரம்மாண்ட ‘லெகோ குதிரை’ உருவம் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. வலிமை, புதுப்பித்தல் மற்றும் நற்பேற்றின் அடையாளமாக இது விளங்குகிறது.
லெகோ செங்கல் மூலம் அதிர்ஷ்டத்தை உருவாக்குங்கள்
இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, விருந்தினர்கள் ஒன்றிணைந்து விளையாடி மகிழ பல்வேறு ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளன.
குறிப்பாக:
லெகோ குதிரை உருவாக்கம்: வருகையாளர்கள் தங்களின் சொந்த ஆற்றல், தைரியத்தின் அடையாளமாக லெகோ செங்கற்களைக் கொண்டு குதிரைகளை உருவாக்கலாம்.
ஆரஞ்சு மரம் தயாரித்தல்: செழுமை மற்றும் மகிழ்ச்சியின் அடையாளமாக, லெகோ ஆரஞ்சு மரங்களை உருவாக்கி வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.
தொடர்புடைய செய்திகள்
சீன எழுத்துக்கலை சுவர்: கலாசாரமும் கலைத்திறனும் இணையும் லெகோ சீன எழுத்துக்கலை சுவர் ஓவியம்.
புகைப்படப் போட்டி: பிரம்மாண்ட குதிரைச் சிலையுடன் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதன் மூலம் வாராந்தரப் பரிசுகளை வெல்லும் வாய்ப்பு.
வசந்தகால கலை நிகழ்ச்சிகள்
பிப்ரவரி 17 முதல் 22 வரை கொண்டாட்டங்கள் உச்சகட்டத்தை எட்டும். அப்போது பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் லெகோ பாணியில் அரங்கேறும்.
சிங்க நடனம் மற்றும் உயரமான கம்பங்களில் நிகழ்த்தப்படும் சாகசங்கள்.
டிராகன் நடனம் மற்றும் ஸ்டில்ட்ஸ் வாக்கிங் சாகசங்கள்.
சீன முகமூடி மாற்றும் கலை மற்றும் பாரம்பரிய மேள இசை நிகழ்ச்சிகள்.
பரிசுகளும் சலுகைகளும்
பிப்ரவரி 17 முதல் 22 வரை, குறிப்பிட்ட சில கடைகள் அல்லது உணவகங்களில் ஒரே ரசீதில் 188 ரிங்கிட் அல்லது அதற்குமேல் செலவு செய்வோர்க்கு அதிர்ஷ்டக் குலுக்கல் மூலம் 800 ரிங்கிட் மதிப்புள்ள லெகோ செட்டுகளையும் மொத்தம் 10,000 ரிங்கிட் மதிப்பிலான பரிசுகளையும் வெல்லும் வாய்ப்பு உள்ளது.
சிங்கப்பூர் பயணிகளுக்காகப் பிரத்தியேகமாக ‘ஒருநாள் நுழைவுச்சீட்டு’ தள்ளுபடிகளும் புதிய ‘6 மாத பிளே பாஸ்’ சலுகைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் குடும்பங்கள் தீம் பார்க், வாட்டர் பார்க் மற்றும் சீ லைஃப் ஆகிய இடங்களுக்குச் சலுகை விலையில் சென்று வரலாம்.
கண்கவர் அலங்காரங்கள், கைவினைச் செயல்பாடுகள், கலாசார நிகழ்ச்சிகளுடன் 2026ல் லெகோலேண்ட் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம், குடும்பங்கள் ஒன்றிணைந்து மகிழ்ச்சியான நினைவுகளை உருவாக்க ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.

