தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
கிளைவ் சாலைக்கும் ரோவெல் சாலைக்கும் இடையே பூனை தொலைந்தது.

லிட்டில் இந்தியாவில் தொலைந்த பூனை: கண்டுபிடிப்பவருக்கு $2,000 வெகுமதி

1 mins read
cb25b1ff-010b-4090-b0a4-a7aa87bdec57
காணாமற்போன பூனை ‘ஏ‌ஷ்’ (Ash). - படம்: மேத்தியூ
multi-img1 of 2

லிட்டில் இந்தியாவில் தம் செல்லப்பிராணியைத் தொலைத்தவர் தற்போது அதனைத் தேடி வருகிறார்.

அதைக் கண்டுபிடிப்பவருக்கு $2,000 வெகுமதி வழங்கப்படும் எனக் குறிப்பிடும் சுவரொட்டிகள் லிட்டில் இந்தியா சுற்றிலும் ஒட்டப்பட்டுள்ளன.

பூனையின் முதுகில் காயம் இருக்கும்.
பூனையின் முதுகில் காயம் இருக்கும். - படம்: மேத்தியூ

ஜூன் 24ஆம் தேதி மாலை, விலங்கு மருத்துவரிடமிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த மேத்தியூ, கிளைவ் சாலைக்கும் ரோவெல் சாலைக்கும் இடையே மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது தாம் வைத்திருந்த பெட்டி ஒன்றிலிருந்து அந்தப் பூனை வெளியே தாவியிருக்கும் என நினைப்பதாகக் கூறுகிறார். 

பூனையைப் பற்றிய ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாக 92776848 அல்லது 81187958 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

பூனைக்கு அன்றாடம் FIP தடுப்பூசி கட்டாயமாகப் போடப்படவேண்டும்.

முதுகில் காயம்பட்டுள்ள அந்தப் பூனையைக் கண்டால் மெதுவாக, சத்தம் போடாமல் அதனைப் பின்தொடர்ந்து தம்மை அழைக்கும்படிம் மேத்தியூ கேட்டுக்கொண்டார்.

படத்தில் காணப்படுவதைவிடப் பூனை சற்று மெலிந்திருக்கக்கூடும் என்றார் மேத்தியூ. தாம் அன்றாடம் அதற்குத் தேடிவருவதாகவும் எவ்விதத் தகவலும் உதவும் என்றும் மேத்தியூ கூறினார்.

காணாமற்போன பூனை.
காணாமற்போன பூனை. - படம்: மேத்தியூ
பூனையைக் காணவில்லையென சுவரொட்டி.
பூனையைக் காணவில்லையென சுவரொட்டி. - படம்: மேத்தியூ
குறிப்புச் சொற்கள்