தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மகாகவி பாரதியாரைப் போற்றிய நிகழ்ச்சி

1 mins read
மகாகவி பாரதியாரின் கவிநயத்தையும் சுதந்திர உணர்வையும் நினைவுகூர்ந்த நிகழ்ச்சி.
0e70beee-2f26-451e-b538-582c15b97b29
முனைவர் மன்னை ராஜகோபாலன் (இடமிருந்து நான்காவது), சிறப்பு விருந்தினர் நாணற்காடன் (எ) சரவணன் (வலம்) ஆகியோருடன் பாடகர்களும் பேச்சாளர்களும். - படம்: இலக்கிய இசை அரங்கம்
multi-img1 of 2

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு செப்டம்பர் 21ஆம் தேதி ‘மகாகவி பாரதி நினைவரங்கம்’ என்ற நிகழ்ச்சி தேசிய நூலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு இலக்கிய இசை அரங்கம் எனும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

நிகழ்ச்சியில் பாரதியாரின் கவிதைகளைச் சிறுவர்கள் பாடினர்; வாசித்தனர்.

மகாகவியின் படைப்புகளில் சுதந்திர உணர்வு, அவர் கண்டறிந்த சமூகப் பிரச்சினைகள், பக்தி ஆகிய அம்சங்கள் பற்றிப் பேச்சாளர்கள் பலர் கலந்துரையாடினர்.

முனைவர் மன்னை ராஜகோபாலன் வழிநடத்திய இந்நிகழ்ச்சியில், தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத் துணைத் தலைவர் நாணற்காடன் (எ) சரவணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

தமிழ்மொழியையும் பண்பாட்டையும் இன்றைய தலைமுறையினர் எவ்வாறு வளர்க்க வேண்டும் என்பதை இருவரும் ஆற்றிய உரைகள் வலியுறுத்தின.

‘பாரதியின் பார்வையில் தமிழ்மொழி’ என்ற தலைப்பில் வானதி பிரகா‌ஷ், ‘பாரதியும் பக்தி நெறியும்’ எனும் தலைப்பில் சுமதி நாகராஜன், ‘பாரதி காண விரும்பிய சமுதாயம்’ என்ற தலைப்பில் இராம்குமார் சந்தானம், ‘பாரதியின் புதுமைப்பெண்’ எனும் தலைப்பில் அனுராதா வெங்கடேஸ்வரன் ஆகியோர் உரையாற்றினர்.

ஸ்மிருதி, சம்ரிதி சஞ்ஜீபன், தயாளகுணதாசன் அனந்தசயன், கற்பகம் விஸ்வநாதன், பத்மா க‌ணே‌ஷ் ஆகியோர் பாடல்கள் பாடினர். அன்னபூரணி கார்த்திகேயன் நிகழ்ச்சி நெறியாளராக வழிநடத்தினார்.

தியாக ரமேஷ் எழுதிய நூலும் கவிஞர் மகுடேசுவரன் எழுதிய திருக்குறள் உரை நூலும் அனைவருக்கும் வழங்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்