சீனாவில் பிறந்து, தற்போது அமெரிக்காவில் வசித்துவரும் யாங் கு (Yang Gu) எனும் மாணவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் குறித்த முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டுள்ளார். இவர், ஏற்கெனவே சிங்கப்பூர் மா. இளங்கண்ணனின் படைப்புகளைச் சீன மொழியில் ஆக்கம் செய்துள்ளார்.
தற்சமயம் சிங்கப்பூர் வந்துள்ள யாங், இங்குள்ள தமிழ் எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் சந்திக்க விரும்புகிறார்.
அச்சந்திப்பிற்கு தேசிய நூலகத்தின் ஆதரவுடன் வரும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 22) மாலை 4 மணிக்குச் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. தேசிய நூலகத்தின் ஐந்தாம் தளத்திலுள்ள ‘இமேஜினேஷன்’ அறையில் சந்திப்பு நடைபெறும்.
விருப்பமுள்ள எழுத்தாளர்களும் கவிஞர்களும் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம். சிங்கப்பூரிலுள்ள இனங்களுக்கிடையே, குறிப்பாக இந்திய - சீன உறவு பற்றிய நூல்கள் வெளியிட்டிருந்தால் அதில் ஒரு படியைக் கொண்டுவரலாம்.