ஜோகூரில் புற்றுநோய்க்கான புதிய மருத்துவமனை

2 mins read
புற்றுநோயால் மடிந்த ஜோகூர் இளவரசரின் நினைவாகத் திறக்கப்படும்
a7b3fe09-fb03-4a10-a43c-93110e1ca48f
மருத்துவமனையில் தங்கி சிகிச்சைபெற வேண்டிய நோயாளிகளுக்குப் புதிய  இடம் வசதியை ஏற்படுத்தித் தரும்.  - படம்: பிரெஷியஸ் மருத்துவக் குழுமம்

சிங்கப்பூர் மருத்துவ நிறுவனமான பிரெஷியஸ் ஜோகூர் பாருவில் புற்றுநோய் நிலையத்தையும் மருத்துவமனையையும் நிறுவியுள்ளது. 

டிசம்பர் 5ல் திறப்புவிழா காணவுள்ள ‘துங்கு லக்‌‌‌ஷ்மணா’ ஜோகூர் நிலையத்தில் திறக்கப்படவுள்ளது. 

121.1 மில்லியன் வெள்ளிச் செலவில் கட்டப்பட்ட மருத்துவமனையில் உடல் உறுப்புகளைப் படமெடுக்கும் ‘பெட்-சிடி’ வசதியும் கதிர் மருத்துவ நிலையமும் இடம்பெறவுள்ளன.

நோய்களை எளிதில் கண்டறிந்து சிகிச்சையை எளிதாக வழங்க புதிய வசதிகள் உதவுகின்றன.

மின்னூட்டம் பெற்ற துகள்களை, உயர்ந்த ஆற்றலைப் பெற வகைசெய்யும் ‘சைக்லோட்ரான்’ என்ற அரிய இயந்திரத்தையும் இந்த மருத்துவமனை கொண்டிருக்கும். 

இந்தப் பணித்திட்டத்தின்வழி கிட்டத்தட்ட 1,000 வேலைகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மருத்துவமனையின் திறப்பு, உள்ளூர் ஊழியரணியை வலுப்படுத்துவதுடன் ஜோகூர்,  சிங்கப்பூர் சிறப்புப் பொருளியலில் சுகாதாரச் சேவைகளையும் வலுப்படுத்தும்.

வளாகத்தில் 200 மெத்தைகள் கொண்ட கட்டடம் ஒன்றையும் அமைப்பது பிரெ‌ஷியஸ் குழுமத்தின் நோக்கம்.

மருத்துவமனையில் தங்கி சிகிச்சைபெற வேண்டிய நோயாளிகளுக்கு இது வசதியை ஏற்படுத்தித் தரும். 

லார்க்கின் செண்ட்ரலில் அமைந்துள்ள இந்த நிலையம்,  முக்கிய போக்குவரத்து மையத்திற்கு அருகிலுள்ளது. 

தேவைப்படும்போது பிற இடங்களிலிருந்தும் சிறப்பு நிபுணத்துவம் காெண்ட மருத்துவ நிபுணர்கள் மருத்துவமனைக்குச் சுமுகமாக வந்து செல்வதற்கான வசதியும் சுற்றி அமைந்துள்ளது.

தற்போது, ஆண்டுதோறும் 1.5 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுப்பயணிகள் மலேசிய மருத்துவமனைகளை நாடுகின்றனர். 

புற்றுநோயால் 25 வயதில் காலமான ஜோகூர் இளவரசர் அப்துல் ஜலீலின் நினைவாக இந்த மருத்துவமனை நிறுவப்பட்டது. 

புற்றுநோயாளிகளுக்கு உதவவேண்டும் என்ற சுல்தானின் ஆசை நினைவுகூரப்பட்டது.

“கொடுந்துன்பத்திற்கு இடையிலும் தைரியத்துடனும் வலிமையுடனும் மீள்திறனுடனும் திகழ்ந்த இளவரசர் அப்துல் ஜலீலுக்கு இந்த மருத்துவமனை அஞ்சலி,” என்று பிரெஷியஸ் மருத்துவக் குழுவின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான வில்லியம் சோங் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்