ஜோயாலுக்காஸ் நகைக்கடை புதிய கிருஷ்ண-லீலா நகை தொகுப்பை ஏப்ரல் 17ஆம் தேதி நோவோடெல் ஹோட்டலில் அறிமுகப்படுத்தியது.
இவ்வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களும் ஜோயாலுக்காசின் வழக்கமான வாடிக்கையாளர்களும் கலந்துகொண்டனர். தமிழ் முரசு நாளிதழின் ஆசிரியர் த. ராஜசேகர் விழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட சீதா கல்யாணம் தொகுப்பை அடுத்து, இவ்வாண்டு கிருஷ்ண-லீலா தொகுப்பு விற்பனைக்கு வந்துள்ளது. தொகுப்பில், நுண்ணிய வேலைப்பாடு கொண்ட ஆறு புதிய நகைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பழைமையான ஆலயங்களிலிருந்தும் சிற்பங்களிலிருந்தும் இந்நகைகளை வடிவமைக்க ஊக்கம் பெற்றதாக ஜோயாலுக்காஸ் தெரிவித்தது.
“கிருஷ்ணரின் வடிவம் கொண்ட நகைகளில் அவரின் முகம் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இது போன்ற தனித்துவமான நகைகளை உருவாக்குவதில் ஜோயாலுக்காஸ் சிறந்து விளங்குகிறது.” என்றார் விழாவில் கலந்துகொண்ட ஜோயாலுக்காசின் வாடிக்கையாளர் திருமதி லதா பிரதீப், 51.
மேலும், அட்சய திருதியை நாளை முன்னிட்டு பல சலுகைகளையும் ஜோயாலுக்காஸ் அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் வைரம், விலையுயர்ந்த கற்கள் உள்ள நகைகளில் 1,250 வெள்ளிக்கும் மேல் செலவிட்டால் அரை கிராம் தங்கமும், 18,250 வெள்ளிக்கு மேல் செலவிட்டால் 10 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படும்.