1969ல் சி.குணாளனுக்கு அளிக்கப்பட்ட ‘ஒமெகா’ கைக்கடிகாரத்தை இங்குக் காணலாம்

தேசிய அரும்பொருளகத்தில் புதிய காட்சிக்கூடம்

2 mins read
0fae593e-566f-4410-b778-01f31e5663b0
புகழ்பெற்ற தேசிய ஓட்டப்பந்தய வீரர் சி.குணாளன், 83, உட்பட பலதரப்பட்ட சிங்கப்பூரர்கள் வழங்கியுள்ள ஆவணங்களையும் இப்புதிய காட்சிக்கூடத்தில் காணலாம். - படம்: த.கவி
multi-img1 of 2

சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகப் புல்வெளியில் உள்ள புதிய தற்காலிகக் காட்சிக்கூடம், சிங்கப்பூரின் புகழ்பெற்ற ஓட்டப்பந்தய வீரர் கனகசபை குணாளனின் ‘ஒமெகா’ கைக்கடிகாரம் உட்பட பல வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணங்களைக் காட்சிப்படுத்துகிறது. அக்டோபர் 9 முதல் டிசம்பர் 14 வரை இதனைக் காணலாம்.

இக்காட்சிக்கூடத்தின் பெயர் ‘மியூசியம் ஆஃப் யூ அண்ட் மீ’.

தேசிய அரும்பொருளகத்தில் உள்ள புதிய தற்காலிகக் காட்சிக்கூடம் ‘மியூசியம் ஆஃப் யூ அண்ட் மீ’.
தேசிய அரும்பொருளகத்தில் உள்ள புதிய தற்காலிகக் காட்சிக்கூடம் ‘மியூசியம் ஆஃப் யூ அண்ட் மீ’. - படம்: த.கவி

எஸ்ஜி60யை முன்னிட்டு, சிங்கப்பூரர்கள் நன்கொடையாக அல்லது இரவலாக வழங்கியுள்ள பொருள்கள்மூலம் சிங்கப்பூர்க் கதையை எடுத்துச் சொல்கிறது இக்காட்சிக்கூடம்.

‘ஆன் தி ரெட் டாட்’ எனும் ‘மீடியாகார்ப் சிஎன்ஏ’வின் ஐந்து பாக ஆவணப்படத் தொடரில் இடம்பெறும் கதைகளை இக்காட்சிக்கூடம் உயிர்ப்பிக்கிறது.

1970களில் சிங்கப்பூரிலேயே உருவாக்கப்பட்ட ‘செட்ரோன்’ தொலைக்காட்சிப் பெட்டி, உள்ளூர் ஆடை வடிவமைப்பாளர் பென்னி ஓங் எடுத்த இளவரசி டயானாவின் அளவுகள், ‘அலெக்சாண்ட்ரா பிரிக்வர்க்ஸ்’சிலிருந்து ஒரு செங்கல் போன்றவையும் இதில் இடம்பெறுகின்றன.

1970களில் சிங்கப்பூரிலேயே உருவாக்கப்பட்ட ‘செட்ரோன்’ தொலைக்காட்சிப் பெட்டி, டாக்டர் ஓங் பாங் யாவ்வின் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நினைவுச்சின்னம்.
1970களில் சிங்கப்பூரிலேயே உருவாக்கப்பட்ட ‘செட்ரோன்’ தொலைக்காட்சிப் பெட்டி, டாக்டர் ஓங் பாங் யாவ்வின் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நினைவுச்சின்னம். - படம்: த.கவி
‘அலெக்சாண்ட்ரா பிரிக்வர்க்ஸ்’சிலிருந்து ஒரு செங்கல் காட்சிக்கு உள்ளது.
‘அலெக்சாண்ட்ரா பிரிக்வர்க்ஸ்’சிலிருந்து ஒரு செங்கல் காட்சிக்கு உள்ளது. - படம்: த.கவி

முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட சிங்கப்பூர் கல், சிங்கப்பூரின் பொது வீடமைப்புப் பயணம், மின்னிலக்கத் திரைகள் போன்றவற்றையும் மக்கள் கண்டு ரசிக்கலாம்.

தேசிய மரபுடைமைக் கழகத்தின் ஆய்வின்படி, சிங்கப்பூர் தனக்கென ஒரு தேசியச் சேகரிப்பை வைத்துள்ளது என்பது பற்றி இரண்டில் ஒரு சிங்கப்பூரருக்கு மட்டுமே தெரியும். அதனால், கழகம் இம்முயற்சியை மேற்கொள்கிறது.

சி.குணாளனின் ‘ஒமெகா’ கைக்கடிகாரம்

1968லும் 1969லும் சிங்கப்பூரின் ‘தலைசிறந்த விளையாட்டு வீரர்’ விருது பெற்ற சி.குணாளனுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட ‘ஒமெகா’ கைக்கடிகாரம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
1968லும் 1969லும் சிங்கப்பூரின் ‘தலைசிறந்த விளையாட்டு வீரர்’ விருது பெற்ற சி.குணாளனுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட ‘ஒமெகா’ கைக்கடிகாரம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. - படம்: த.கவி

‘சிங்கப்பூரின் ஆக வேகமான மனிதர்’ என ஒருகாலத்தில் அழைக்கப்பட்ட திரு குணாளன், 1968 ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தை 10.38 வினாடிகளில் ஓடிப் படைத்த தேசிய சாதனையை அடுத்த 33 ஆண்டுகளுக்கு யாராலும் அசைக்கமுடியவில்லை.

அச்சாதனைக்காக அவருக்கு 1968ல் ‘தலைசிறந்த விளையாட்டு வீரர்’ விருது கிடைத்தது. மியன்மாரில் நடந்த சியாப் விளையாட்டுப் போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றதற்காக 1969லும் அவருக்கு அதே விருது கிடைத்தது. இருமுறை அவ்விருதை வென்றதற்காக சிங்கப்பூர் தொழில்சாரா திடல்தடச் சங்கம் 1969ல் அவருக்கு ‘ஒமெகா’ கைக்கடிகாரத்தை வழங்கியது.

“ஒவ்வொரு முறை விருதைப் பெறும்போதும் $5,000 கிடைக்கும். 1960களில் அது மிகப்பெரிய தொகை. ஆனால், அந்தத் தொகை எனக்கானதன்று, சங்கத்துக்கானது! அதனால் சங்கம் மிகவும் மகிழ்ச்சியடைந்து எனக்காக ஓர் அன்பளிப்பை வாங்கித் தந்தது,” என நினைவுகூர்ந்தார் திரு குணாளன். இக்கைக்கடிகாரம் அசைவுகளை உணர்ந்து, அணியும்போது மட்டுமே இயங்கும்.

“முதல் சில ஆண்டுகளில் நான் இந்தக் கைக்கடிகாரத்தை அணியவில்லை. ஏனெனில், அது அவ்வளவு விலைமதிப்பற்றது. பிறகுதான் அணியத் தொடங்கினேன். அதனால் இந்தக் கண்காட்சியில் பங்கேற்கும் வாய்ப்பு வந்ததும், இக்கடிகாரத்தைக் காட்சிக்கு வைக்கலாம் என்றும் மக்கள் இதில் ஆர்வம் கொள்வர் என்றும் எண்ணினேன்,” என்றார் திரு குணாளன்.

காட்சிக்கூடம் அன்றாடம் காலை 10 மணி முதல் இரவு 7 மணிவரை திறந்திருக்கும். அனுமதி இலவசம். மேல்விவரங்களுக்கு go.gov.sg/museum ofuandme இணையத்தளத்தை நாடவும்.

‘மியூசியம் ஆஃப் யூ அண்ட் மி’ காட்சிக்கூடம்.
‘மியூசியம் ஆஃப் யூ அண்ட் மி’ காட்சிக்கூடம். - படம்: த.கவி
குறிப்புச் சொற்கள்