புத்தகங்களை விரும்பி வாசிக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு ஒரு பரிசைத் தேடுகிறீர்களா? தமிழ் முரசு இணைத்துள்ள இந்தப் பரிசுப் பட்டியல் உங்களுக்கு உதவும்!
மின்னிலக்க வாசிப்பை நிர்வகிக்கும் ‘ரகுதென் கோபோ’ (Rakuten Kobo) எனும் ஜப்பானிய நிறுவனம் ஒரு புதிய தொலையியக்கியை அறிமுகப்படுத்தியுள்ளது.
வாசகர்கள் தங்கள் மின்னூல் சாதனத்தை எளிய முறையில் பயன்படுத்த ‘கோபோ’ தொலையியக்கி அனுமதிக்கிறது.
பிளாஸ்டிக் உள்ளிட்ட மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்களால் கட்டமைக்கப்பட்ட இந்தத் தொலையியக்கி ‘புளூடூத்’ இணைப்பு வழியாகச் சாதனத்துடன் இணைகிறது.
புத்தகங்களில் இனி பெயர் எழுதத் தேவையில்லை. ஏனெனில் வாசகரின் பெயரைச் சுவாரசியமான முறையில் புத்தகங்களில் பொறிக்கலாம்.
அதுமட்டுமன்றி, பொறிக்கும் சாதனத்தை வாசகர் விரும்பும் எந்த வடிவமைப்பிற்கும் தனிப்பயனாக்கலாம்.
மேலும், புத்தகங்களில் எந்த மைக்கறையும் இல்லாமல் சுத்தமாக இருப்பதை இந்தச் சாதனம் உறுதிசெய்கிறது.
புத்தகங்களை அதிகம் பயன்படுத்தி, பைக்குள் வைக்கும் பழக்கம் வாசகர்கள் பலரிடையே உள்ளது. இதனால் நாளடைவில் புத்தகங்கள் சேதமடையத் தொடங்குகின்றன.
தொடர்புடைய செய்திகள்
இதுபோன்ற சூழ்நிலைகளில் புத்தகங்களைப் பாதுகாக்க விரும்பும் வாசகருக்கு ஒரு சிறிய புத்தகப் பையைப் பரிசாக அளிக்கலாம்.
பொதுவாகத் தடிமனான துணியால் ஆன இந்தப் புத்தகப் பை ஒவ்வொரு வாசகரின் ரசனையையும் ஈர்க்கும் பல்வேறு வடிவமைப்புகளில் வருகிறது.
அத்துடன், இந்தச் சிறப்புப் பரிசை நீங்களே கைப்படச் செய்தும் அளிக்கலாம்!
எண்ணற்ற புத்தகங்களை வாசிப்போருக்கு
அதிக எண்ணிக்கையிலான புத்தகங்களை வாசிப்போர் கதைகளை நினைவில் வைத்துக்கொள்ளவும் வாசிப்பைக் கண்காணிக்கவும் ஒரு பதிவேடு உதவும்.
அதுமட்டுமன்றி, புத்தகங்கள் பற்றிய வாசகரின் எண்ணங்கள், கதாபாத்திரங்கள், கருப்பொருள்களைப் பதிவு செய்வதன் மூலம் சிந்தனையும் நினைவாற்றலும் எழுத்தும் மேம்படும்.
புத்தக எண்ணிக்கையை அதிகரிக்க விரும்பும் வாசகருக்கு
புத்தாண்டில் புதிய புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்குப் புத்தகக் கடைப் பரிசு அட்டை பயனுள்ளதாக அமையும்.
பெரும்பாலும் நீண்ட காலம் செல்லுபடியாகும் பரிசு அட்டைகள் உள்ளூர்ப் புத்தகக் கடைகளிலிருந்து நூல்களை வாங்க வாசகர்களை வலியுறுத்துகின்றன.
எந்தச் சந்தர்ப்பத்திற்கும் ஏற்ற பரிசாக அமையும் பரிசு அட்டைகள் வாசிப்பை ஊக்குவிக்கின்றன.

