ஜூன் 28ல் குட்மன் கலை நிலைய வரவேற்பு தினம்

ஜூன் 28ல் குட்மன் கலை நிலைய வரவேற்பு தினம்

2 mins read
f0bab42e-ef0a-4be5-b7d3-e12736658589
குட்மன் கலை நிலையத்தின் வரவேற்பு தினம் குறித்த விளம்பரப் பதாகை. - படம்: தி ஆர்ட்ஸ் ஹவுஸ்

‘விளையாட்டைச் சந்திக்கும் கலைகள்’ என்ற முழக்கவரியை மையப்படுத்தி குட்மன் கலை நிலையத்தின் வரவேற்பு தின நிகழ்ச்சி இந்த ஆண்டு ஜூன் 28ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.

காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரை நடைபெறும் இந்நிகழ்ச்சி, புத்தாக்கம், சமூகம், இணைப்பு எனப் பல கூறுகளும் நிறைந்த, சிங்கப்பூரின் ஆகப் பெரிய கலைகளின் உறைவிடமாக, அனைத்து வயதினருக்கும் தனித்துவமான அனுபவத்தை ஏற்படுத்தித் தரவிருக்கிறது.

ஒவ்வோர் ஆண்டும் தி ஆர்ட்ஸ் ஹவுஸ்சின் ஏற்பாட்டில் நடைபெறும் இவ்வரவேற்பு தினம், நடனம், கதைசொல்லல், கலை நிகழ்ச்சிகள் மூலமும் உள்ளூர்க் கலைஞர்களோடு உரையாடும் வாய்ப்பை ஏற்படுத்துவதன் மூலமும் வருகையாளர்கள் கலை வெளிப்பாட்டை முழுமையாக உணர வழிவகுக்கிறது.

வலிமைமிக்க தயாரிப்பாளர்கள்: படைப்பாளர்களின் சந்தைகள்

உள்ளூர்க் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், வடிவமைப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, இருவழித் தொடர்புடைய கைவினைச் சாவடிகள் நிறைந்த ஒரு துடிப்புமிக்க நடுவத்தை Block 52ல் உருவாக்கவுள்ளனர்.

அதோடு, ‘பிளான்ட்டிடியூட் (Plantitude)’ நிறுவனம் ஏற்பாடு செய்யும் வேறொரு சந்தையில் இயற்கையை முன்னிலைப்படுத்தும் வணிகங்களும் உள்ளூர் விவசாயிகளும் பங்கேற்கவுள்ளனர்.

புளோக் Cல் அமைக்கப்படும் இச்சந்தையில், பராமரிப்புப் பொருள்களிலிருந்து கழிவுகளற்ற தின்பண்டங்கள்வரை பல வகையான பொருள்களை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம்.
புளோக் Cல் அமைக்கப்படும் இச்சந்தையில், பராமரிப்புப் பொருள்களிலிருந்து கழிவுகளற்ற தின்பண்டங்கள்வரை பல வகையான பொருள்களை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம். - படம்: தி ஆர்ட்ஸ் ஹவுஸ்

சூரிய ஒளியில் மிளிரும் வண்ணங்கள்

புளோக் Oக்கு அருகே இருக்கும் திறந்தவெளியில், ஒரு வேடிக்கையான, துடிப்புமிக்க கலை நடவடிக்கையில் வருகையாளர்கள் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தலாம்.

மூன்று கலைச் சாவடிகளுக்குச் சென்று, வைக்கோல் ஓவியம், விரல் ஓவியம் போன்ற வெவ்வேறு ஓவிய நுட்பங்களைக் கற்றுக்கொண்டு, தங்கள் தனித்துவமான கலைப் படைப்பை உருவாக்கலாம்.

திரைக்குப் பின்னால் என்ன நடக்கிறது?

எவ்வாறு ஒரு கலைப் படைப்பு உருவாகிறது என்றும் கருத்துகள் எவ்வாறு ஆராயப்பட்டு மேம்படுத்தப்படுகின்றன என்றும் நேரில் காண ஓர் அரிய வாய்ப்பு இது.

காட்சிக் கலைகள் முதல் மேடைக் கலைகள் வரை வெவ்வேறு கலை வடிவங்களுக்குப்பின் இருக்கும் கடின உழைப்பு, அவற்றுக்கான தூண்டுதல், நடத்தப்படும் ஆய்வு ஆகியவற்றை வருகையாளர்கள் கண்டறியலாம்.

சிறுவர்களுக்கான நிகழ்ச்சிகள்

இந்திய நடன அறிமுக வகுப்பில் 4 முதல் 7 வயதிலான சிறுவர்கள் கலந்துகொள்ளலாம்.

சிறுவர்கள் விலங்குகளைப்போல நடனமாடி, கதைகள் சொல்லி, இந்திய மேளதாளங்களுக்கு குட்மன் கலை நிலையத்தின் கறுப்புப் பெட்டியில் (Black Box) ஆடிப் பழகலாம்.

மாலையில் திரைப்படம்

2024ஆம் ஆண்டு நடந்த குட்மன் கலை நிலையத்தின் வரவேற்பு தினத்தில் திரைப்படம் பார்த்து மகிழ்ந்த மக்கள்.
2024ஆம் ஆண்டு நடந்த குட்மன் கலை நிலையத்தின் வரவேற்பு தினத்தில் திரைப்படம் பார்த்து மகிழ்ந்த மக்கள். - படம்: தி ஆர்ட்ஸ் ஹவுஸ்

இரவு வேளையில் வருகையாளர்கள் அனைவரும் சேர்ந்து, ‘டிரான்ஸ்ஃபார்மர்ஸ் ஒன்’ (Transformers One) திரைப்படத்தைக் கண்டு களிக்கலாம்.

திரைப்படம் பார்க்கும்போது ருசிக்க, அங்குள்ள உணவுச் சாவடிகளிலிருந்து சுவையான தின்பண்டங்களையும் மக்கள் பெற்றுக்கொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்