மக்கள் கவிஞர் மன்றம் சார்பில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கலை இலக்கிய விழா மே 1ஆம் தேதி உலகத் தொழிலாளர் தினத்தன்று நடைபெறவுள்ளது.
இவ்விழாவையொட்டி இலக்கியச் சொற்பொழிவுகளும், பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
மாலை ஆறு மணியளவில் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் நடைபெறவுள்ள இவ்விழாவில் தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் மத்தியக் குழு உறுப்பினரும், சிங்கப்பூர் ஆசிரியர் சங்கப் பொதுச் செயலாளருமான திரு மைக் திருமன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கவுள்ளார்.
திரைப்படக் கலைஞர் ரோகிணி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்
கடந்த இருபது ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இவ்விழாவில், தமது துறையில் சிறப்பாகப் பணியாற்றிய ஒருவருக்கோ அல்லது உயரிய நோக்குடன் சமூகப் பணியாற்றிய ஒருவருக்கோ உழைப்பாளர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்படும்.