பெரனாக்கான் அரும்பொருளகத்தில் கண்காட்சி

ஆசிய பாரம்பரியத்தில் மயிலுக்கு சிறப்பிடம்

2 mins read
c60f957f-b30c-47b8-a951-58f2bd8cf64b
பெரனாக்கான் கலாசாரத்தில் திருமண ஆபரணம் - படம்: பெரனக்கன் அரும்பொருளகம்
multi-img1 of 2

காலங்காலமாக மயில் இந்து கலாசாரத்தில் மட்டுமின்றி மற்ற ஆசிய கலாசாரங்களுக்கிடையே அடையாளச் சின்னமாக விளங்குவதைப் புதிய கண்காட்சி எடுத்துக்காட்டவிருக்கிறது. 

சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், பெரனாக்கான் அரும்பொருளகத்தின் ஏற்பாட்டில் கண்காட்சி நடைபெறவிருக்கிறது.

‘பீகாக் பவர்: பியூட்டி அன்ட் சிம்பாலிசம் அக்ராஸ் கல்ச்சர்ஸ்’ (Peacock Power: Beauty and Symbolism Across Cultures) என்ற தலைப்பில் இக்கண்காட்சி இவ்வாண்டு அக்டோபர் 31ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதிவரை நடைபெறும். 

அழகு, ஆற்றல், தெய்வீகம் ஆகியவற்றின் காலத்தால் அழியாத சின்னமான மயில், ஆசியா முழுவதிலும் கலையை எவ்வாறு ஊக்குவித்து, பண்பாடுகளை இணைத்துள்ளதை இக்கண்காட்சி ஆராய்கிறது.

பெரனாக்கான் கலையைத் தொடக்கமாகக் கொண்டுள்ள இந்தக் கண்காட்சிக்காக, தேசியச் சேகரிப்பு (National Collections) முக்கிய நன்கொடையாளர்களிடமிருந்தும் 100க்கும் மேற்பட்ட கலைப்படைப்புகள் தருவிக்கப்பட்டுள்ளது.   பெரனாக்கான் திருமணப் பொருள்கள், இந்துக்களின் தைப்பூசக் காவடி, ஜாவானிய பாத்திக் (Batik) துணிகள் கண்காட்சியில் முக்கிய இடம் பெறுகின்றன.

கண்காட்சியின் மற்றொரு சிறப்பம்சமாக, முப்பரிமாண ஒளிப்படவியல் (holographic) தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட “மயில் பெரடைஸ் (Peacock Paradise)” இடம்பெறுகிறது. 

மயில்களின் தனித்துவமான உலகத்தைக் கண்முன் கொண்டுவரும் இந்த அங்கம், மயில்களின் பல்வேறு ரகங்களையும் அவற்றின் தனித்துவமான நடவடிக்கைகளையும் பற்றி விளக்குகிறது.

மேலும் பார்வையாளர்கள் மயில் வடிவத்துடன் தொடர்புடைய கலை நடவடிக்கையில் ஈடுபடலாம்.

கலைஞர் எர்னஸ்ட் கோவின் புதிய படைப்பான “தௌசண்ட் ஐஸ் (Thousand Eyes)” என்ற நவீனக் கலைப்படைப்புடன் இந்தக் கண்காட்சி நிறைவடைகிறது.

‘தௌசண்ட் ஐஸ்’ கலைப்படைப்பு
‘தௌசண்ட் ஐஸ்’ கலைப்படைப்பு - படம்: கலைஞர் எர்னஸ்ட் கோ
குறிப்புச் சொற்கள்