வாசனை திரவியங்களில் 2,500க்கும் மேற்பட்ட மூலப்பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. அந்த மூலப்பொருள்கள்தான் வாசனை திரவியங்களுக்கு தனித்துவமான வாசனையை அளிக்கின்றன.
ஆனால், அப்பொருள்கள் சிலருக்குத் தோல் அழற்சி அல்லது ஒவ்வாமையை உண்டாக்கலாம். வாசனை திரவியங்கள் இயற்கை அல்லது ரசாயன மூலப்பொருள்களால் உருவாக்கப்படுபவை.
பெரும்பாலானோர் தோல் தடிப்புகள் போன்ற பக்க விளைவுகளைச் சந்திப்பார்கள். வாசனை திரவியங்களில் காணப்படும் மூலப்பொருளால் ஒருவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டால் அது வாழ்நாள் முழுவதும் நீடிக்கக்கூடும்.
ஒவ்வாமை இருந்தால் தோல் சிவத்தல், வீக்கம் போன்ற அறிகுறிகள் முதலில் தென்படும். பெரும்பாலான அறிகுறிகள் ஒருவரின் முகம், கைகள், அக்குள்கள் ஆகிய இடங்களில் உருவாகும்.
தோல் ஒவ்வாமை ஏற்பட முதலில் அந்த வாசனை திரவியத்தில் இருக்கும் மூலப்பொருள் ஒருவரின் சருமத்திற்குள் ஊடுருவ வேண்டும். பின்னர் சருமத்தில் இருக்கும் ஒரு புரதத்தோடு சேரும்போது அவருடைய நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்படுகிறது.
அதன் விளைவாக ஒவ்வாமை ஏற்படுகிறது. காசநோய் உள்ளவர்களுக்கு அறிகுறிகள் இன்னும் மோசமாக இருக்கலாம். இதிலிருந்து தற்காத்துக்கொள்ளப் பல எளிய வழிமுறைகள் உள்ளன.
தவிர்ப்பு
வாசனை திரவிய ஒவ்வாமையைக் கையாள்வதற்கான மிகவும் பயனுள்ள வழி, அதைத் தவிர்ப்பதாகும்.
மேற்பூச்சு சிகிச்சை
தோல் பாதிப்புகள் இருந்தால் சருமத்தின்மேல் பூசுவதற்கான கார்டிக்கோஸ்டீராய்ட்கள் அல்லது ஆன்டிஹிஸ்டமின்கள் நிறைந்த களிம்புகள் (cream) உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
ஆன்டிஹிஸ்டமின் மருந்துகள்
வாய்வழி எடுக்கப்படும் ஆன்டிஹிஸ்டமின் மருந்துகள் ஒவ்வாமை அறிகுறிகள், சளி, கண் மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்றவற்றை நிவர்த்திசெய்ய உதவும்.
கார்டிகோஸ்டீராய்டுகள்
ஒவ்வாமையால் மூக்கு தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டால் கார்டிகோஸ்டீராய்டு மருந்து அடங்கிய நாசித் தெளிப்பானைப் பயன்படுத்தலாம்.
ஒவ்வாமைப் பரிசோதனை
ஒவ்வாமை நிபுணருடன் ஆலோசித்து, ரத்தப் பரிசோதனை மேற்கொண்டு ஒவ்வாமை எதனால் ஏற்படுகிறது என்பதைக் கண்டுபிடிக்கலாம்.
வாழ்க்கைமுறை மாற்றங்கள்
இயற்கையான மூலப்பொருள்கள் அடங்கிய வாசனை திரவியத்தைப் பயன்படுத்தலாம். வீட்டில் நல்ல காற்றோட்டத்தை உறுதிசெய்ய வேண்டும். காற்றுச் சுத்திகரிப்பானைப் பயன்படுத்தி காற்றில் உள்ள தூசைக் குறைக்க முயலலாம்.
மருத்துவர் ஆலோசனை
மேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்றியும் ஒவ்வாமை குறையாமல் இருந்தால் மருத்துவரின் ஆலோசனையை நாடுவது சிறந்தது.