தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கம்போங் கிளாமில் ரமலான் விழாக்கோலம்

3 mins read
25e8c923-863f-47d1-8bee-011ac28eb24e
சென்ற ஆண்டைப்போல் இவ்வாண்டும் கம்போங் கிளாமில் ரமலான் சந்தை இடம்பெறுகிறது. - படம்: ஒன் கம்போங் கிளாம்

ரமலான் மாதத்துக்கான ஏற்பாடுகள் சிங்கப்பூரில் தொடங்கிவிட்டன. ஒன் கம்போங் கிளாமின் வருடாந்தர 35 நாள் ரமலான் சந்தை ஐந்தாவது முறையாக நடைபெறவிருக்கிறது.

இந்த ஆண்டு பிப்ரவரி 19 முதல் மார்ச் 25 வரை இச்சந்தை நடைபெறும்.

திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை பிற்பகல் 2 மணி முதல் இரவு 11 மணி வரையிலும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11.30 மணி வரையிலும் இச்சந்தை இயங்கும்.

பிப்ரவரி 21 (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 முதல் 9.30 மணி வரை நடைபெறும் சந்தையின் அதிகாரபூர்வத் திறப்பு நிகழ்ச்சியில் உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் முகம்மது ஃபை‌‌‌‌‌ஷால் இப்ராகிம், ஜாலான் புசார் குழுத்தொகுதி எம்.பி. டெனிஸ் புவா இருவரும் கலந்துகொள்வர்.

இம்முறை சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டு நிறைவையொட்டி பல புதிய அம்சங்களும் இடம்பெறுகின்றன.

புதிய கம்போங் அறக்கொடை ஓட்டம், கம்போங் கிளாம் சுற்றுலா, புதையல் தேடல், முத்திரைச் சேகரிப்பு நிகழ்ச்சி (Stamp Rally), பாத்திக் ஓவியம், அரேபியக் கையெழுத்துக் கலைப் (Calligraphy) பயிலரங்குகள் முதலானவை புதிதாக அறிமுகமாக உள்ளன.

சுல்தான் பள்ளிவாசல் வாரந்தோறும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.40 மணி முதல் 9 மணி வரை, 15 நிமிட இடைவேளைகளில் ரமலானின் சிறப்பைக் குறிக்கும் காட்சிகளுடன் ஒளியூட்டப்படும்.

சுல்தான் பள்ளிவாசல் வாரந்தோறும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.40 முதல் 9 மணி வரை, 15 நிமிட இடைவேளைகளில் ரமலானின் சிறப்பைக் குறிக்கும் காட்சிகளுடன் ஒளியூட்டப்படும். 
சுல்தான் பள்ளிவாசல் வாரந்தோறும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.40 முதல் 9 மணி வரை, 15 நிமிட இடைவேளைகளில் ரமலானின் சிறப்பைக் குறிக்கும் காட்சிகளுடன் ஒளியூட்டப்படும்.  - படம்: ஒன் கம்போங் கிளாம்

மார்ச் 22 (சனிக்கிழமை) மாலை 6.30க்கு அரபு ஸ்திரீட் அருகே 1,000 பேர் சமூக நோன்புத் துறப்பில் பங்கேற்பர்.

மார்ச் 22ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.30க்கு அரபு ஸ்திரீட் அருகே 1,000 பேர் வருடாந்தர சமூக நோன்பு துறப்பில் பங்கேற்பர்.
மார்ச் 22ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.30க்கு அரபு ஸ்திரீட் அருகே 1,000 பேர் வருடாந்தர சமூக நோன்பு துறப்பில் பங்கேற்பர். - படம்: ஒன் கம்போங் கிளாம்

அறுசுவை உணவு

120 உணவு, பான, சில்லறை விற்பனைப் பங்காளிகளுடன் ரமலான் சந்தை உயிர்பெறவுள்ளது. துருக்கியப் பனிக்கூழ், குனாஃபா, சாத்தே, பாரம்பரிய மலாய் உணவுகள் போன்றவை நாவிற்கினிய விருந்தாக அமையவுள்ளன.

கம்போங் சுற்றுலா

இரண்டு மணி நேர கம்போங் சுற்றுலாவழி சுல்தான் பள்ளிவாசல், கண்டஹார் ஸ்திரீட் போன்றவற்றையும் மலாய் உணவுகளையும் மக்கள் ரசிக்கலாம். சுற்றுலாவில் பங்கேற்போருக்கு 15 வெள்ளி ரமலான் சந்தைப் பற்றுச்சீட்டு கிடைக்கும்.

கம்போங் புதையல் தேடல்

கம்போங் கிளாமின் ஐந்து முக்கியப் பகுதிகளில் ஒளித்துவைக்கப்பட்டுள்ள நாணயங்களைக் கண்டுபிடித்து 8,000 வெள்ளி வரை வெல்லலாம். ஒவ்வொரு வாரமும் நடைபெறும் இத்தேடலில் போட்டியிடுவோர், பங்கேற்கும் கடைகளில் உதவிக்குறிப்புகளைக் கேட்டுக்கொள்ளலாம்; சமூக ஊடகங்களையும் நாடலாம்.

கம்போங் அறக்கொடை ஓட்டம்

முதன்முறையாக கம்போங் அறக்கொடை ஓட்டம் நடைபெறவுள்ளது. இந்த 2.4 கிலோமீட்டர் ஓட்டம், ‘டிரக்ஃப்ரீ எஸ்ஜி’, ‘பிக் பாய்ஸ் ரன் கிளப் ஆகியவற்றுடன் இணைந்து பிப்ரவரி 15ஆம் தேதி காலை 6 முதல் 10 மணி வரை நடைபெறவுள்ளது.

ஆரோக்கிய வாழ்க்கைமுறையையும் போதைப்பொருள் தடுப்பு பற்றிய விழிப்புணர்வையும் ஊக்குவிப்பது நோக்கம். முன்னாள் போதைப் புழங்கிகளின் வாழ்க்கைப் பயணங்களைத் தெரிந்துகொள்ளவும் இது வாய்ப்பாக அமையும்.

ஓட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக இணைப் பேராசிரியர் முகம்மது ஃபை‌‌‌‌‌ஷால் இப்ராகிம், திருவாட்டி டெனிஸ் புவா இருவரும் வருகையளிப்பர்.

இதன்மூலம் திரட்டப்படும் நிதி, கம்போங் கிளாம் சமூக நிலையத்தின் பயனாளிகளுக்கு உணவும் ஆதரவும் வழங்கப் பயன்படுத்தப்படும்.

பயிலரங்குகள்

இந்த ஆண்டு கம்போங் கிளாமின் மரபைக் கொண்டாடும் நால்வகை சிறப்புப் பயிலரங்குகள் நடைபெறவுள்ளன. அரேபியக் கையெழுத்துக் கலை, பாத்திக் ஓவியந்தீட்டுதல், காகிதத்தில் மலாய்த் தலைப்பாகையை உருவாக்குதல், பொம்மலாட்டம், பயன்படுத்திய காப்பித்தூளிலிருந்து சோப் தயாரித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

நீடித்த நிலைத்தன்மை

இந்த ஆண்டு, இச்சந்தைக்குத் தேவைப்படும் மின்சாரத்தின் ஒரு பகுதிக்கு முற்றிலும் சூரிய ஒளியால் இயங்கும் மின்னாக்கிகள் (clean battery generators) பயன்படுத்தப்படுகின்றன.

சொந்த நீர்ப்புட்டிகளைக் கொண்டுவருவோர் சந்தையின் அனைத்து பானக்கடைகளிலும் சலுகை பெறலாம். உணவு, பானக்கடைகளில் கிட்டத்தட்ட பாதி, பொட்டலமிடலுக்கு மறுசுழற்சிசெய்யப்பட்ட பொருள்களைப் பயன்படுத்துகின்றன.

குறிப்புச் சொற்கள்