வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதையும் வசதி குறைந்தோருடன் வாசிப்பின் மகிழ்ச்சியைப் பகிர்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ள ‘ரீட் ஃபார் புக்ஸ்’ புத்தக நன்கொடை இயக்கம் ஜூலை மாதம் தொடங்கவுள்ளது.
தேசிய நூலக வாரியத்தின் முக்கியத் திட்டங்களில் ஒன்றான இது ஜூலை 31ஆம் தேதிவரை இடம்பெறும். வாசிப்புக்காக 10 பேர் ஒதுக்கும் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் பயனாளிகளுக்கு நன்கொடைச் சேகரிப்பிலிருந்து ஒரு புத்தகமோ அதற்குச் சமமானவையோ வழங்கப்படும்.
இதற்குப் பங்களிக்க தனியாகவோ கூட்டு அமர்வாகவோ வாசிப்பில் ஈடுபடலாம். இதில் பங்கேற்க, படிக்கும் நேரத்தைப் புகைப்படமாகவோ திரைச்சுடுவாகவோ (Screenshot) பதிவுசெய்லாம்.
இத்திட்டத்தில் பங்களிக்க இந்த இணைப்பில் விருப்பத்தைப் பதிவிடலாம்: https://go.gov.sg/rfb25-organisations

