மின்னணுக் கழிவு மறுசுழற்சி: சுற்றுச்சூழலைக் காக்க ஆர்வம்

மின்னணுக் கழிவு மறுசுழற்சி: சுற்றுச்சூழலைக் காக்க ஆர்வம்

2 mins read
30d7e1ef-f53e-470c-ac6c-2076a541aac6
-

மின்­னி­யல், மின்­னணு சார்ந்த கழி­வு­க­ளின் அளவு சிங்­கப்­பூ­ரில் அதி­க­ரித்­துக்கொண்டே வரு­கிறது.

சிங்­கப்­பூ­ரில் ஒவ்­வோர் ஆண்­டும் சுமார் 60,000 டன் மின்­ன­ணுக் கழி­வு­கள் உற்­பத்­தி­யா­கின்­றன. இக்­க­ழி­வு­கள் முறை­யாக அகற்­றப்­ப­டா­விட்­டால் அவை சுற்­றுச்­சூ­ழ­லுக்கு ஏற்­ப­டுத்­தக் கூடிய பாதிப்­பு­கள் ஏரா­ளம்.

மின்­ன­ணுக் கழி­வு­களை அகற்­று­வது மிகப் பெரிய சவா­லான பணி­யாக உரு­வா­கிக் கொண்­டி­ருக்­கும் இவ்­வே­ளை­யில் அவற்றை மறு­சு­ழற்சி செய்து பயன்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சி­கள் நடந்து வரு­கிறது.

'ஹங்­கர் வாரி­யர்ஸ்' என்ற தொண்­டூ­ழி­யக் குழுவை நிறு­விய ஜெய்­தேவ் பாலாஜி, 16, சுற்­றுச்­சூ­ழல் பாது­காப்­பிற்­கா­க­வும் உண­வுப் பற்­றாக்­கு­றையை முறி­ய­டிப்­ப­தற்­கா­க­வும் பல திட்டங்களை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளார்.

"இந்­தச் சாத­னங்­களை மறு­சு­ழற்சி செய்­வ­தால் நச்­சுப் பொருள்­களை நிலப்­ப­ரப்­பில் இருந்து விலக்கி வைக்க முடி­வ­தோடு புதிய சாத­னங்­க­ளைத் தயா­ரிக்­கும்­போது சில பாகங்­களை மீண்­டும் பயன்­ப­டுத்த முடி­கிறது," என்று ஜெய்­தேவ் கூறி­னார்.

அனைத்­து­லக இந்­தியப் பள்­ளி­யி­லி­ருக்­கும் மாண­வர்­க­ளால் அமைக்கப்பட்டுள்ள இக்­குழு, பொரு­ளா­தார துணை மட்­டு­மன்றி ஒவ்­வொ­ரு­வ­ரும் தங்­க­ளது நேரத்­தை­யும் சுற்­றுச்­சூ­ழல் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு ஒதுக்க வேண்­டும் என்று நம்­பிக்கை கொண்­டுள்­ளது.

நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் இயந்­தி­ரப் பொறி­யி­யல் துறையில் பயிலும் திருச்­செல்­வம் ராஜ்­நி­வாஸ், 23, தனது தொடக்­க­நிலைப் பள்ளி பரு­வத்­தி­லி­ருந்தே மின்­ன­ணுக் கழி­வு­களை மறு­சு­ழற்சி செய்­வதைப் பற்றி ஆர்­வம் கொண்­ட­வர். தனது வட்­டா­ரத்­தில் உள்ள மின்­ன­ணுக் கழி­வு­க­ளுக்­கான குப்­பைத்­தொட்­டி­க­ளைப் பயன்ப­டுத்தி வரு­கி­றார் இவர்.

மின்­னி­யல் கரு­வி­க­ளைப் பழுது பார்த்­து­விட்டு பழு­தா­னா­லும் அவற்றை முறை­யான வகை­யில் அப்­பு­றப்­ப­டுத்­து­வ­தால் இயற்கை வளங்­களை நம்­மால் பாது­காக்க இய­லும் என்­றார் ராஜ்­நி­வாஸ்.

தனது தொடக்­க­நிலைப் பள்­ளி­யில் இதைப் பற்­றிய உரை­கள் நடந்­தே­றி­ய­தா­லும் தனது குடும்­பம் இதில் ஆர்­வம் காட்­டு­வ­தா­லும் ராஜ்­நி­வா­சுக்கு இதைப் பற்றி சிறு வய­தி­லி­ருந்தே தெரி­யும். ஆனால், பல­ருக்கு பிளாஸ்­டிக், காகி­தம், உலோ­கம், கண்ணாடி மறு­சு­ழற்சி பற்றி தெரிந்த அள­வுக்கு மின்­ன­ணுக் கழி­வு­க­ளின் மறு­சு­ழற்சி பற்றி தெரி­வ­தில்லை.

இதைப் பற்­றிய விழிப்­பு­ணர்வை அதி­க­ரிக்க சமூக நிலை­யங்­களில் மின்­ன­ணுக் கழி­வு­க­ளுக்­கான சேக­ரிப்பு இயக்க நிகழ்ச்­சியை ஏற்­பாடு செய்­ய­லாம் என்­றார் ராஜ்­நி­வாஸ்.

'ஸ்பூட்­னிக்­லேப்' நிறு­வ­னத்­தின் துணை நிறு­வ­ன­ரான சாத் சினாய், 39, மின் சாதனங்­களைச் சரி­செய்­வ­தி­லும் மின்­ன­ணுக் கழிவுகளை மறு­சு­ழற்சி செய்­வ­தி­லும் அதீத ஆர்­வம் கொண்­ட­வர்.

'இன்­ஜி­னி­ய­ரிங்­குட்' என்ற அமைப்­பு­டன் இணைந்து 'ரிமெக்­கிட்' பட்­ட­றை­களை நடத்­தி­யுள்­ளார் இவர்.

விலை அதிகமுள்ள சாத­னங்­களை வாங்க இய­லா­தோ­ர் பழு­தடைந்த சாத­னங்­களை எவ்வாறு சரி­செய்வது என்பது குறித்து இப்­பட்­ட­றை­யி­லி­ருந்து கற்­றுக்­கொள்­ள­லாம்.

அதே­நே­ரம், மின்­ன­ணுக் கழி­வு­க­ளைப் பயன்­பாட்­டிற்குக் கொண்டு வரு­வதே இதன் முக்­கிய நோக்­க­மா­கும். அதே அமைப்பு அறி­மு­கப்­ப­டுத்­திய 'சால்­வெஜ்­கார்­டன்' என்ற முனைப்­பின் மூலம் பழு­தான மின் சாத­னங்­க­ளின் பாகங்­க­ள் மறு­ப­யன்­பாட்­டிற்கு வழிவகுக்­கிறது.

"மக்­கள் தங்­கள் சொந்த சாத­னங்­களை சரி­செய்­வ­தைச் சுற்­றி­யுள்ள நிச்­ச­ய­மற்ற தன்­மையை நாம் போக்க வேண்­டும். பழு­தான மின் சாத­னங்­களை நீங்­கள் தூக்கி எறி­வ­தற்கு முன், அவை ஏற்­கெனவே உடைந்­து­விட்­ட­தால் அவற்றை ஏன் பிரித்து அவற்­றி­லி­ருந்து கற்­றுக்­கொள்­ளக்­கூ­டாது?" என்று சாத் கேள்வி எழுப்­பி­னார்.