ஆய்வு: பிள்ளைகளின் அறிவை இசைக்கல்வி கூர்மையாக்குகிறது

இசை கலந்த கல்விமுறை, எண்களிலும் எழுத்துகளிலும் பிள்ளைகளின் புரிதலை ஆழப்படுத்தும் என்கிறது புதிய ஆய்வு.

ஆய்வு: பிள்ளைகளின் அறிவை இசைக்கல்வி கூர்மையாக்குகிறது

1 mins read
f1417d06-0bf6-40ff-8400-0af3241752c7
மேடையில் பாலர்கள். - படம்: மைண்ட்சேம்ப்ஸ்

ஆரம்பக்கல்வியில் இசையை ஒருங்கிணைப்பதால் பிள்ளைகளின் புலன்களும் படிப்புத் திறனும் மேம்படுகின்றன.

‘மைண்ட்சேம்ப்ஸ்’ ஆரம்பக்கல்வி நிறுவனத்தின் நடைமுறை ஒருங்கிணைப்பு ஆய்வுப் பிரிவு நடத்திய மூன்று ஆண்டுகால ஆய்வு, பிள்ளைகளின் கல்வியில் இசை ஆற்றக்கூடிய முக்கியமான பங்களிப்பைக் குறிப்பிட்டது.

எடுத்துக்காட்டாக, இசை கற்கும் பிள்ளைகள், பின்னங்கள் (fractions) போன்ற கணக்குப்பாட அம்சங்களை நன்கு புரிந்துகொள்வதாக ஆய்வில் தெரியவந்ததாக ஆகஸ்ட் 20ஆம் தேதி, ‘மைண்ட்சேம்ப்ஸ்’ ஆரம்பக்கல்வி நிறுவனம் கூறியது.

சுருதி, லயம், ராகம் போன்ற இசை அம்சங்கள் மூலம் மொழிப்பாங்கு வளர்வதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. கணக்குத்திறன், மொழித்திறன், சமூகத் திறன்கள் ஆகியவற்றைத் தனித்தனியாகக் கற்பிக்காமல் ஒருங்கிணைந்த முறையை இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது.

இசையோடு கற்கும் பிள்ளைகள், ஆரம்பக் கணக்குப்பாடக் கல்வியின் மதிப்பீட்டுத் தேர்வு (Test of Early Mathematics Assessment), பாலர் பள்ளித் தொடக்க கால ஏட்டுக்கல்வித் தேர்வு (Test of Preschool Early Literacy) ஆகிய அனைத்துலக மதிப்பீட்டு முறைகளில் இசை கற்காத மாணவர்களைக் காட்டிலும் சிறந்து விளங்குகின்றனர்.

தெற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகமும் சிங்கப்பூரின் ‘மைண்ட்சேம்ப்ஸ் ப்ரீஸ்கூல்’ பாலர் கல்வி நிறுவனமும் இணைந்து இது குறித்து ஆய்வுகளைத் தொடரவுள்ளன.

இத்தகைய நேரடி ஆய்வுகளை மேற்கோள்களாகப் பயன்படுத்தி ஆரம்பக் கல்வியை வடிவமைப்பதன் முக்கியத்துவத்தை ‘மைண்ட்சேம்ப்ஸ்’ அமைப்பின் நிர்வாக இயக்குநரும் குழும நிர்வாக அதிகாரியுமான டேவிட் சியம் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்