அச்சத்தின் உச்சிக்கு அழைத்துச்செல்லும் செந்தோசாவின் ‘ஃபெஸ்டிவல் ஆஃப் திரில்ஸ்’

அச்சத்தின் உச்சிக்கு அழைத்துச்செல்லும் செந்தோசாவின் ‘ஃபெஸ்டிவல் ஆஃப் திரில்ஸ்’

1 of 3
படம்: யோகிதா அன்புச்செழியன்
படம்: யோகிதா அன்புச்செழியன்
படம்: யோகிதா அன்புச்செழியன்

18 Sep 2026 - 5:30 am

3 mins read

இதயத் துடிப்பை எகிறவைக்கும் அதிவேகச் சாகசங்கள், இருளில் உறையவைக்கும் திகில் காட்சிகள், கண்ணைக் கவரும் ஒளி ஓவியங்கள் எனப் பல்வேறு அனுபவங்களைப் பார்ப்பவர்க்கு ஏற்படுத்தி வருகிறது ரிசார்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா.

செப்டம்பர் 1 முதல் நவம்பர் 1 வரை தீவு முழுதையும் திருவிழாக் களமாக மாற்றுகிறது ‘ஃபெஸ்டிவல் ஆஃப் திரில்ஸ் 2026’.

செப்டம்பர் 1 முதல் நவம்பர் 1 வரை  ‘ஃபெஸ்டிவல் ஆஃப் திரில்ஸ் 2026’ நடைபெறுகிறது.
செப்டம்பர் 1 முதல் நவம்பர் 1 வரை ‘ஃபெஸ்டிவல் ஆஃப் திரில்ஸ் 2026’ நடைபெறுகிறது. - படம்: யோகிதா அன்புச்செழியன்

திகில் விரும்பிகள் முதல் பிள்ளைகள், குடும்பத்தினர் வரை அனைவரையும் ஈர்க்கும் வகையில், பல்வேறு திகில், சாகச அனுபவங்களை ஒரே இடத்தில் வழங்குகிறது இந்தக் கொண்டாட்டம்.

சிங்கப்பூர்க் கடல்வாழ் உயிரினக் காட்சியகம்

புதுப்பிக்கப்பட்ட சிங்கப்பூர்க் கடல்வாழ் உயிரினக் காட்சியகத்தில் நடைபெறும் ‘இன்டூ தி குளோஷியன்’ கண்காட்சி, ஆழ்கடல் உயிரினங்களை வண்ணமயமான ஒளியில் காட்சிப்படுத்துகிறது. உள்ளூர்ப் பாரம்பரியக் கண்ணாடி நியான் ஒளிக் கலைஞர் மேகன் ஃபூ வடிவமைத்த ‘ஓஷியானிக் குளோ’ கலைப்படைப்புகளும் நியான் ஒளியில் ஜொலிக்கின்றன.

உள்ளூர் பாரம்பரியக் கண்ணாடி நியான் ஒளிக் கலைஞர் மேகன் ஃபூ வடிவமைத்த ‘ஓஷியானிக் குளோ’ கலைப்படைப்புகள்.
உள்ளூர் பாரம்பரியக் கண்ணாடி நியான் ஒளிக் கலைஞர் மேகன் ஃபூ வடிவமைத்த ‘ஓஷியானிக் குளோ’ கலைப்படைப்புகள். - படம்: யோகிதா அன்புச்செழியன்

செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெறவுள்ள ‘சைலன்ட் டிஸ்கோ’ நிகழ்ச்சியில் ஆழ்கடல் சூழலில் நடனமாடி மகிழலாம். எலும்புக்கூடு உடையணிந்த நீச்சல் சாகசக்காரர்கள் மீனைக் கொடுக்கும் காட்சிகளும் கைவினைப் பயிலரங்குகளும் நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்புச் சேர்க்கின்றன.

அட்வென்ச்சர் கோவ் நீர்விளையாட்டுப் பூங்கா

பிள்ளைகளும் குடும்பத்தினரும் ‘லெஜண்ட் கீப்பர்ஸ்’ செயலி விளையாட்டின் மூலம் வரலாற்றுப் புதிர்களை இங்கு ஆராயலாம்.

பிள்ளைகளும் குடும்பத்தினரும் ‘லெஜண்ட் கீப்பர்ஸ்’ செயலி விளையாட்டை அட்வென்ச்சர் கோவ் நீர்விளையாட்டுப் பூங்காவில் விளையாடி மகிழலாம்.
பிள்ளைகளும் குடும்பத்தினரும் ‘லெஜண்ட் கீப்பர்ஸ்’ செயலி விளையாட்டை அட்வென்ச்சர் கோவ் நீர்விளையாட்டுப் பூங்காவில் விளையாடி மகிழலாம். - படம்: யோகிதா அன்புச்செழியன்

அக்டோபர் மாதச் சனிக்கிழமை இரவுகளில் நடைபெறும் ‘பூல் பார்ட்டி பேனிக்’ மர்மக் கொலைப் புதிர் விளையாட்டு, ‘எஸ்கேப் ரூம்’ பாணியில் விறுவிறுப்பான அனுபவத்தைப் பங்கேற்பாளர்களுக்கு வழங்கவுள்ளது.

‘வீவ்’ கடைத்தொகுதி

மோட்டார் விளையாட்டுப் பிரியர்களைக் கவரும் வகையில் இப்பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. பந்தய கார் கண்காட்சி, மோட்டார் பந்தய வீரர்களுடனான சிறப்புச் சந்திப்பு ஆகியவற்றுடன், லெனோவா கேமிங் மண்டலத்தில் இலவசப் பந்தய கார் பாவனைக் கருவிகளையும் பயன்படுத்திப் பார்க்கலாம்.

‘வீவ்’ கடைத்தொகுதியில் பந்தய கார் பாவனைக் கருவிகளை ஓட்டிப் பார்க்கலாம்.
‘வீவ்’ கடைத்தொகுதியில் பந்தய கார் பாவனைக் கருவிகளை ஓட்டிப் பார்க்கலாம். - படம்: யோகிதா அன்புச்செழியன்

‘மாக்’ காஸ்மெடிக்ஸ் நிறுவனம் வழங்கும் ஹாலோவீன் ஒப்பனை அனுபவங்களும் இங்கு இடம்பெறுகின்றன.

யுனிவர்சல் ஸ்டூடியோஸ் சிங்கப்பூர்: ஹாலோவீன் பயங்கர இரவுகள் 14

செப்டம்பர் 25 முதல் நவம்பர் 1 வரை தெரிவுசெய்யப்பட்ட 18 இரவுகளில், ‘ஹாலோவீன் ஹாரர் நைட்ஸ் 14’ யுனிவர்சல் ஸ்டூடியோஸ் சிங்கப்பூரில் கோலாகலமாக அரங்கேறவுள்ளது.

இவ்வாண்டின் ‘ஹாலோவீன் ஹாரர் நைட்ஸ்’ நிகழ்ச்சியில் இடம்பெறும் கதாபாத்திரங்களுடன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.
இவ்வாண்டின் ‘ஹாலோவீன் ஹாரர் நைட்ஸ்’ நிகழ்ச்சியில் இடம்பெறும் கதாபாத்திரங்களுடன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். - படம்: யோகிதா அன்புச்செழியன்

“இம்முறை முக்கிய அங்கங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளிலும் அதிக கவனம் செலுத்தியுள்ளோம். எதிர்பாராத இடங்களில் புது விதமான அதிர்ச்சிதரும் அம்சங்களை உருவாக்குகிறோம்.

“நடிகர்கள் எங்கிருந்து வெளியே வருவார்கள் என்பதை உங்களால் கணிக்கவே முடியாது. பூங்காவின் எந்தப் பகுதியும் பாதுகாப்பானது அல்ல,” என்றார் ரிசார்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவின் படைப்பு இயக்குநர் ஜெம்மா லெஃபோஷர்.

இவ்வாண்டின் ‘ஹாலோவீன் ஹாரர் நைட்ஸ்’ நிகழ்ச்சியில் இடம்பெறும் கதாபாத்திரமான ‘டிவி கோஸ்ட்’.
இவ்வாண்டின் ‘ஹாலோவீன் ஹாரர் நைட்ஸ்’ நிகழ்ச்சியில் இடம்பெறும் கதாபாத்திரமான ‘டிவி கோஸ்ட்’. - படம்: யோகிதா அன்புச்செழியன்

ஆசியப் பேய்க்கதைகளின் வேர்களை ஆழமாக ஆராய்ந்து, திகிலைப் பல்வேறு வடிவங்களில் உணர்த்தும் நான்கு பிரதான பேய் வீடுகள் பார்வையாளர்களுக்காக இவ்வாண்டு அமைக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூர்ஸ் மோஸ்ட் ஹாண்டட்: ஆன் ஏர்

கைவிடப்பட்ட தொலைக்காட்சி நிலையத்துக்குள் பங்கேற்பாளர்களை அழைத்துச் செல்லும் இந்தப் பேய் வீடு, அங்கு நேரலைத் தொலைக்காட்சிப் பேய் ஒன்றால் சிறை பிடிக்கப்பட்ட நடிகர்களை எதிர்கொள்ளச் செய்கிறது. அவர்கள் ஐந்து உள்ளூர்ப் பேய்க்கதைகளை மீண்டும் மீண்டும் நடிக்கின்றனர்.

‘சிங்கப்பூர்ஸ் மோஸ்ட் ஹாண்டட்: ஆன் ஏர்’ பேய் வீட்டின் அங்கங்கள்.
‘சிங்கப்பூர்ஸ் மோஸ்ட் ஹாண்டட்: ஆன் ஏர்’ பேய் வீட்டின் அங்கங்கள். - படம்: யோகிதா அன்புச்செழியன்

ஆறு மீட்டர் உயரம் கொண்ட அரண்மனை முகப்புடன் அமைக்கப்பட்டுள்ள இந்தக் காட்சியில், ஓடும் நீரும் பசையுள்ள பிசினும் பயன்படுத்தப்பட்டு ஈரமான, இருண்ட சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

‘சிங்கப்பூர்ஸ் மோஸ்ட் ஹாண்டட்: ஆன் ஏர்’ பேய் வீட்டின் அங்கங்கள்.
‘சிங்கப்பூர்ஸ் மோஸ்ட் ஹாண்டட்: ஆன் ஏர்’ பேய் வீட்டின் அங்கங்கள். - படம்: யோகிதா அன்புச்செழியன்

காராங் குனி: த கர்ஸ்ட் கலெக்ஷன்

சிறுவயது நினைவுகளுடன் தொடர்புடைய ‘காராங் குனி’ கதையைத் திகிலூட்டும் கோணத்தில் அணுகுகிறது இந்தப் பேய் வீடு. இதில், சாபம் பெற்ற 1,125 பழைய பொருள்களைச் சேகரித்தவர், அவற்றின் தாக்கத்தால் தானும் அரக்கனாக மாறும் கதைக்களம் சித்திரிக்கப்படுகிறது.

மேட் இன் ஹெல்: எக்ஸ்எல் ரொபோட்டிக்ஸ்

மனிதர்களின் உயிர்ச் சக்தியை உறிஞ்சி, செயற்கை நுண்ணறிவு உடல்களுக்கு ஆற்றலாக மாற்றும் கொடூர ஆய்வகத்துக்குள் பார்வையாளர்கள் சிக்கிக்கொள்கின்றனர். ஐந்து மீட்டர் உயரச் சுவர்கள், மினுமினுக்கும் ஒளி இவற்றுடன் புகை மண்டலங்களைக் கொண்டு பிரம்மாண்டமான கிடங்கு போன்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

‘மேட் இன் ஹெல்’ பேய் வீடு.
‘மேட் இன் ஹெல்’ பேய் வீடு. - படம்: யோகிதா அன்புச்செழியன்

சேட்டர்பாக்ஸ் சார்லிஸ் வோடவில் ஹாரர்ஸ்

மனிதர்களைப் பொம்மைகளாக மாற்றும் பொம்மலாட்டக் கலைஞர் சார்லியின் திகில் நிறைந்த உலகிற்குள் பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது இந்தப் பேய் வீடு.

பிரம்மாண்டத் தயாரிப்புகள்

திரைக்குப் பின்னால் இதற்கான தயாரிப்புப் பணிகளும் கணிசமான அளவில் இடம்பெற்றுள்ளன.

கதாபாத்திரங்களுக்கான செயற்கை முக அமைப்புகளை உருவாக்க நான்கு மாதங்கள் எடுத்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். ஒவ்வொரு நடிகருக்கும் ஒப்பனை செய்ய சராசரியாக 30 நிமிடங்கள் தேவைப்படுகின்றன. இவ்வாண்டு நிகழ்ச்சியில் 340 ஆடைகள், 250 லிட்டர் செயற்கை ரத்தம் அவற்றுடன் 108 செயற்கை முடி அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும், ஹாலோவீன் கருப்பொருள் அடிப்படையில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சுவையான உணவுவகைகளும் பானங்களும் தீவு முழுதும் கிடைக்கின்றன.

ஹாலோவீன் கருப்பொருளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட சுவையான உணவுகளும் பானங்களும் தீவு முழுதும் கிடைக்கின்றன.
ஹாலோவீன் கருப்பொருளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட சுவையான உணவுகளும் பானங்களும் தீவு முழுதும் கிடைக்கின்றன. - படம்: யோகிதா அன்புச்செழியன்

இரவுநேரத் திகில் சம்பவங்களுக்கு இடையே, குடும்பங்களுக்கான பகல் நேரக் கொண்டாட்டமாக ‘ட்ரிக் ஆர் திரில்ஸ்’ நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அனைவருக்கும் பிடித்தமான ‘மினியன்ஸ்’, ‘குரோமி’, ‘ஷ்ரெக்’, ‘செசமி ஸ்ட்ரீட்’ போன்ற கதாபாத்திரங்களை நேரில் சந்தித்து நிழற்படங்கள் எடுத்து மகிழும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

அனைவருக்கும் பிடித்த ‘மினியன்ஸ்’ போன்ற கதாபாத்திரங்களை நேரில் சந்தித்து நிழற்படங்கள் எடுத்து மகிழும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
அனைவருக்கும் பிடித்த ‘மினியன்ஸ்’ போன்ற கதாபாத்திரங்களை நேரில் சந்தித்து நிழற்படங்கள் எடுத்து மகிழும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. - படம்: யோகிதா அன்புச்செழியன்
குறிப்புச் சொற்கள்