‘கழிவறை இருக்கையைவிட தண்ணீர்ப் புட்டியில் 40,000 மடங்கு நுண்கிருமிகள்’

கழிவறை இருக்கையைக் காட்டிலும், பலமுறை பயன்படுத்தக்கூடிய  (reusable) தண்ணீர்ப் புட்டியில் 40,000 மடங்கு அதிக நுண்கிருமிகள் ஒட்டிக்கொண்டிருக்கலாம் என்று புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ‘வாட்டர்ஃபில்டர்குரு.காம்’ நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு, நீர்ப்புட்டிகளின் பல பகுதிகளை ஆய்வுசெய்தனர். நீர்ப்புட்டிகளில் இருவகை நுண்கிருமிகள் ஒட்டிக்கொண்டிருந்ததை அவர்கள் கண்டுபிடித்ததாக ‘ஹஃப்போஸ்ட்’ செய்தி தெரிவித்தது.

அவ்விரண்டில் ஒருவகை நுண்கிருமி, ‘ஆன்டிபயாட்டிக்’ எனப்படும் நுண்ணுயிர்க்கொல்லிகளையும் வலுவாக எதிர்க்கக்கூடிய தொற்றை ஏற்படுத்தலாம் என்றும் இன்னொரு நுண்ணுயிரி இரைப்பை, குடல் சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.

அத்துடன், நீர்ப்புட்டிகளின் தூய்மையை மற்ற வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்களுடன் ஆய்வாளர்கள் ஒப்புநோக்கினர். 

அதில், சமையலறைக் கழுவுதொட்டியில் இருப்பதைப்போல் இருமடங்கும் கணினிச் சுட்டியில் (mouse) இருப்பதைப்போல் நான்கு மடங்கும் நுண்கிருமிகள் நீர்ப்புட்டியில் ஒட்டிக்கொண்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

“மனிதர்களின் வாய், பலதரப்பட்ட, பெரும் எண்ணிக்கையிலான நுண்கிருமிகளின் இருப்பிடமாகத் திகழ்கிறது. அதனால், அருந்துகலன்களில் நுண்கிருமிகள் அதிகமாக இருப்பதில் வியப்பில்லை,” என்றார் லண்டன் இம்பீரியல் கல்லூரியின் மூலக்கூறு நுண்ணுயிரியல் வல்ல்நுர் டாக்டர் ஆண்ட்ரூ எட்வர்ட்ஸ்.

ஆனாலும், நீர்ப்புட்டிகளாலும் நீர்க்குழாய்களாலும் ஆபத்தில்லை என்கிறார் ரெடிங் பல்கலைக்கழக நுண்ணுயிரியல் வல்லுநர் டாக்டர் சைமன் கிளார்க்.

“நீர்ப்புட்டி காரணமாக ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக நான் கேள்விப்பட்டதே இல்லை. அதுபோல, தண்ணீர்க் குழாய்களும் ஒரு பிரச்சினை இல்லை. மனிதர்களின் வாயில் இருக்கும் நுண்கிருமிகளே நீர்ப்புட்டிகளிலும் பெரும்பாலும் ஒட்டிக்கொண்டிருக்கலாம்,” என்றார் டாக்டர் சைமன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!