சிங்கப்பூரில் இளம் பெரியோரை இலக்காகக் கொண்டுள்ள தனிப்பட்ட வாடகை இடங்கள் அதிகரிப்பு

சிங்கப்பூரில் இளம் பெரியோரை இலக்காகக் கொண்டுள்ள தனிப்பட்ட வாடகை இடங்கள் அதிகரிப்பு

2 mins read
35bffd5a-afae-46db-bd2d-ba8d96702e4c
சிராங்கூனில் உள்ள இட வாடகைத் தொழிலான ‘4ப்ளே சிங்கப்பூர்’இல், ஒவ்வோர் அறையும் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

நிலப் பற்றாக்குறை உள்ள சிங்கப்பூரில், பல இளம் பெரியோர் தங்கள் முப்பதுகளிலும் பெற்றோருடன் தொடர்ந்து வசித்துவருகிறார்கள்.

அதனால் சமூகக் கூட்டங்களுக்காக, தனிமையான, விலைக் கட்டுப்படியான இடங்களுக்கான விருப்பம் இங்கு நிலவுகிறது.

பலரின் அந்த விருப்பத்தை நிறைவேற்ற, வர்த்தகங்கள் முன்வந்துள்ளன.

டிக்டாக், இன்ஸ்டகிராம் போன்ற சமூக ஊடகத் தளங்களில் நவீன வடிவமைப்பைக் கொண்டுள்ள அறைகளைக் காட்டும் இத்தகைய இடங்களுக்கான விளம்பரங்களைக் காணலாம்.

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் போன்ற நிகழ்வுகளுக்கு விளம்பரப்படுத்தப்படும் இந்த அறைகளில் பெரும்பாலும் இருக்கைகள், தொலைக்காட்சிகள், விளையாட்டுகள், தின்பண்டங்கள் போன்றவை கிடைக்கப்பெறுகின்றன.

தம்மைப் போன்ற இளம் பெரியோருக்கு நிதி ரீதியாகப் பார்த்தால், இத்தகைய தொழில்கள் புரிந்துகொள்ளக்கூடியவையாக இருப்பதாக ஷக்திவேல் ஆறுமுகம், 28, கூறினார்.

“ஒரு முழு நாள் அல்லது அரை நாளுக்கு ஓர் இடத்தை வாடகைக்கு எடுப்பதற்குப் பதிலாக, நான் ஒரு மணி நேர அடிப்படையில் அவற்றை வாடகைக்கு எடுத்துப் பணத்தை மிச்சப்படுத்தலாம்,” என்றார் அவர்.

“வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் தங்கியிருப்பதால் நான் பெரிய அளவிலான கூட்டங்களை நடத்துவதில்லை. காரணம், என் வீட்டில் போதிய அளவுக்கு இடம் இல்லை,” என்றார் வழக்கறிஞரான அவர்.

ஜாலான் சுல்தானில் 2023ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட இட வாடகைத் தொழிலான ‘ஹேங்அவுட் ப்ளேஸ்’இன் உரிமையாளர் அல்வின் கோ, சிங்கப்பூரில் உள்ள இளம் பெரியோருக்கு இட, தனிமைப் பற்றாக்குறை இருப்பதால் இந்தத் தொழில் அதனைச் சாதகமாகப் பயன்படுத்துகிறது என்று கூறினார்.

‘ஹேங்அவுட் ப்ளேஸ்’இல் மூன்று மணி நேரத்திற்கான வாடகை விலை $39இலிருந்து தொடங்குகிறது.

மற்றோர் இட வாடகை நிறுவனமான ‘ஹைட்அவுட் ப்ளேஸ்’இன் உரிமையாளர் ஷிஹான் கோல், தமது தொழிலை 2022ஆம் ஆண்டில் தொடங்கியதாகக் கூறினார். கொவிட் கிருமிப்பரவல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பொது இடங்கள் மீண்டும் கூட்டம் நிறைந்து காணப்பட்ட நிலையில், தொழிலைத் தொடங்கியதாக அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்