செல்லப்பிராணிகளைக் கொண்டாடிய பெருவிழா

செல்லப்பிராணிகளைக் கொண்டாடிய பெருவிழா

1 of 3
படங்கள்: மக்கள் கழகம்
படங்கள்: மக்கள் கழகம்
படங்கள்: மக்கள் கழகம்

21 Nov 2025 - 6:24 pm

2 mins read

சிங்கப்பூரின் அறுபதாண்டு நிறைவுநாளை முன்னிட்டு மரின் பரேட்-பிராடல் ஹைட்ஸ் குழுத்தொகுதி, மவுண்ட்பேட்டன் தனித்தொகுதி, மக்கள் கழகம் இணைந்து முதல்முறையாகச் செல்லப்பிராணிகளுக்காக ‘எஸ்ஜி60 பெட்ஸ் எக்ஸ்ட்ராகவன்சா’ (SG60 Pets Extragavanza) எனும் பெருவிழாவை நடத்தின.

இவ்விழா நவம்பர் 15ஆம் தேதி மெக்பர்சன் சமூக நிலையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

நாய், பூனை. கிளி, எறும்பு. குதிரை, வண்ணப்பறவைகள் போன்ற செல்லப்பிராணிகளுக்கு சிறப்பான நிகழ்ச்சிகள், ஆர்வத்தைத் தூண்டும் பயிலரங்குகள் எனப் பல வியக்கவைக்கும் அங்கங்கள் இடம்பெற்றன.

நிகழ்ச்சியைச் சிறப்பிக்கும் விதமாக மரின் பரேட்-பிராடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியின் அடித்தள ஆலோசகர்கள் திரு சியா கியன் பெங், இணைப் பேராசிரியர் முஹம்மது ஃபைஷல் இப்ராஹிம், டயானா பாங், திரு கோ பெய் மிங், திருவாட்டி டின் பெய் லிங் , மவுண்ட்பேட்டன் தனித்தொகுதியின் அடித்தள ஆலோசகர் கோ ஸி கீ ஆகியோர் பங்கேற்றனர்.

வந்திருந்த குழந்தைகள் செல்லப்பிராணிகளை பற்றிக் கற்றுக்கொள்வதற்கு குதிரை சவாரி, பறவைகளைப் பேசவைப்பது, ‘ஜோ தி எக்ஸ்புளோரர் (Joe The Explorer)’ நடத்திய பொம்மலாட்டம் நிகழ்ச்சி, செல்லப்பிராணிகளுடன் பேசக்கூடிய நிபுணர்களுடன் ஒரு கலந்துரையாடல், செல்லப்பிராணிகளின் அறிவுக்கூர்மையை வெளிப்படுத்துவதற்கு சவால் தடங்கள் எனப் பல சுவாரசியமான அங்கங்கள் இடம்பெற்றன.

“நமது செல்லப்பிராணிகள் நம்மிடம் இருக்கும் பல குணாதிசயங்களை வெளிப்படுத்தி மகிழ வைக்கின்றன. இந்நிகழ்ச்சி செல்லப்பிராணிகள் மட்டுமின்றி நமது அண்டை அயலாரின் வரவேற்பு மனப்பான்மையும் கொண்டாடுகிறது. இது ‘நாம் முதல்’ (we first) சமூகத்தை உருவாக்க உதவுகிறது,” என்றார் திரு சியா கியன் பெங்.

“பன்முகத்தன்மை கொண்ட இந்நிகழ்ச்சியானது, பல்வேறு செல்லப்பிராணிகளுடன் பழகவும், சமூகத்துடன் ஒன்றுகூடித் தொண்டூழியம் செய்வதற்கும் ஒரு சிறப்பான முயற்சியாகத் திகழ்கிறது,” என்று மவுண்ட்பேட்டன் சமூக நிலையத்தின் தொண்டூழியரான ரூபா சர்மா, 35, குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்