செப்டம்பர் மாதக் கவிமாலையில் SG60 கவிதைகள் சிறப்பு நிகழ்வு
1 mins read
கவிமாலை அமைப்பு 304ஆவது சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தியது. - படம்: கவிலாமை/ ஃபேஸ்புக்
SG60 Poems Special Event in September Poetry Garland
Kavimalai, a monthly gathering for poets and poetry enthusiasts in Singapore, held its 304th meeting at the National Library on September 27th. The event featured a special segment titled 'Vinmeen Piditheevu - SG60 Poems,' which included a narrative presentation of Seviyinba Sangeetha's poem and a speech by Ko. Ilangovan about poetry. The meeting also included regular segments like 'Eriyum Nigazhvu' (Burning Event), a competitive poem reading, and a prize distribution. The reason and element of the featured poem will also be included in the event.
Generated by AI
சிங்கப்பூரில் உள்ள கவிஞர்கள், கவிதை ஆர்வலர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை மாதாந்தரச் சந்திப்பை நடத்தி வருகிறது.
கவிமாலையின் 304ஆவது சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை (செப்டம்பர் 27) மாலை 6 மணியளவில் தேசிய நூலகத்தில் நடைபெற்றது.
கவிமாலையின் இம்மாதச் சிறப்பு அங்கமாக விண்மீன் பிடித்தீவு - SG60 கவிதைகள் சிறப்பு நிகழ்வாக செவியின்ப சங்கீதா கவிதையினை கதையாக அரங்கேற்றும் அங்கமும், கோ.இளங்கோவன் அவர்களின் கவிதை குறித்தான உரையும் இடம்பெற்றன.
மேலும் பாதித்த கவிதையின் காரணமும் அங்கமும் இடம்பெறும்.
இம்மாத ‘எரியும் நிகழ்வு’, ‘போட்டிக் கவிதைகள் வாசித்தல்’ ஆகியவற்றுடன் பரிசளிப்பு ஆகிய வழக்கமான கவிமாலை அங்கங்கள் நடைபெற்றன.