‘ஷேர்-ஏ-டெக்ஸ்ட்புக்’ இயக்கம்: பயன்படுத்திய பாடநூல்களை நன்கொடையாக வழங்கலாம்

‘ஷேர்-ஏ-டெக்ஸ்ட்புக்’ இயக்கம்: பயன்படுத்திய பாடநூல்களை நன்கொடையாக வழங்கலாம்

1 of 2
படம்: ஃபேர்பிரைஸ் குழுமம்
படம்: ஃபேர்பிரைஸ் குழுமம்

16 Nov 2024 - 6:13 pm

1 mins read

வரவிருக்கும் கல்வியாண்டுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் வசதி குறைந்த மாணவர்களுக்கு ஆதரவளிக்‌க ஃபேர்பிரைஸ் குழுமம் தனது ‘ஷேர்-ஏ-டெக்ஸ்ட்புக்’ இயக்கத்தின் 42வது பதிப்பை அறிவித்துள்ளது.

நல்ல நிலையிலிருக்கும், ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பாடநூல்களை நன்கொடையாக வழங்குமாறு சமூகத்திற்கு ஃபேர்பிரைஸ் குழுமம் அழைப்பு விடுத்துள்ளது. தேவைப்படும் மாணவர்களுக்குக் கல்வி வளங்களை இலவசமாக வழங்கும் நோக்கில் இந்த இயக்‌கம் ஆண்டுதோறும் செயல்பட்டு வருகிறது.

இவ்வாண்டின் இயக்கம் நவம்பர் 16ஆம் தேதியிலிருந்து 30ஆம் தேதிவரை நடைபெறும்.

கல்வி அமைச்சின் தற்போதைய பாடத்திட்டத்திற்கு பொருத்தமான பாடப்புத்தகங்களை ஃபேர்பிரைஸ் எக்‌ஸ்ட்ரா பேரங்காடிகள், சு சி மனிதநேய இளையர் நிலையம், விடாசிட்டி (Vidacity) ஆகிய இடங்களில் பொதுமக்‌கள் வழங்கலாம்.

புத்தக நன்கொடைகளை வரிசைப்படுத்தவும் ஒழுங்கமைக்கவும் தன்னார்வலர்களாகச் செயல்பட விரும்புபவர்கள் https://form.jotform.com/terrasg/SAT-volunteer-registration-form என்ற இணையத்தளத்தில் பதிவு செய்யலாம்.

​​பொதுமக்களும் மாணவர் பயனாளிகளும் டிசம்பர் 7ஆம் தேதியிலிருந்து 8ஆம் தேதிவரை சு சி மனிதநேய இளையர் நிலையத்தில் தினமும் காலை 9 முதல் இரவு 7 மணி வரை பாடநூல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

மேல்விவரங்களுக்கு http://www.fairpricegroup.com.sg/share-a-textbook/ எனும் இணையப்பக்கத்தை நாடவும்.

குறிப்புச் சொற்கள்
ஃபேர்பிரைஸ்கல்விநவம்பர்மாணவர்நன்கொடை